காசா எல்லையில் மற்றொரு பலஸ்தீனர் சுட்டுக்கொலை - WeligamaNews

Latest

Tuesday, September 25, 2018

காசா எல்லையில் மற்றொரு பலஸ்தீனர் சுட்டுக்கொலை




காசா எல்லையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் மற்றொரு பலஸ்தீனர் இஸ்ரேல் துருப்புகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கிழக்கு காசா எல்லையை ஒட்டி ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதே 21 வயது இமாத் இஷதாவி என்ற இளைஞனின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஹமாஸ் ஆட்சியில் உள்ள காசாவின் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

காசா மக்கள் தமது பூர்வீக பூமிக்கு திரும்பும் உரிமையைக் கோரி இடம்பெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்்டக்காரர்கள் டயர்களை எரித்தும், கற்களை எறிந்தும் போராடி வருகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறும் பெரும் ஒன்றுகூடல்கள் தவிர நாள்தோறும் இரவு வேளைகளிலும் சிறு எண்ணிக்கையிலான பலஸ்தீனர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து வருகின்றனர்.





கடந்த மார்ச் 30 ஆம் திகதி தொடக்கம் இடம்பெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டங்களில் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 186 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலஸ்தீனரின் ஸ்னைப்பர் துப்பாக்கிச் சூட்டில் இஸ்ரேலிய படை வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். காசாவின் ஹமாஸ் ஆட்சியை தனிமைப்படுத்தும் முயற்சியாக இஸ்ரேல் ஒரு தசாப்தத்திற்கு மேலாக அந்த பகுதியை முற்றுகையில் வைத்துள்ளது.