இனி மௌனமாக இருக்கப்போவதில்லை: லசித் மலிங்க.சிறிலங்கா கிரிக்கட்டில் முறைகேடுகள் இடம்பெற்றால் தாம் அது குறித்து மௌனமாக இருக்கப்போவதில்லை என்று இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் பங்கேற்பதற்கான இலங்கை அணி ஐக்கிய அரபு ராச்சியத்துக்கு நேற்று பயணித்தது.

இதன்போது செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட மலிங்க இதனைக் கூறியுள்ளார்.

தமது உடலைக்காட்டிலும் மனம் வலிமையானது.

ஊழல்கள் மோசடிகள் இடம்பெறும் பட்சத்தில் அதனை வெளிப்படுத்த தாம் தயங்கப்போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.