மகிந்தவின் தலையில், கோளாறு ஏற்பட்டுவிட்டது - பொன்சேகா


கடந்த 10 வருடங்களாக ஜனாதிபதியாக பதவிவகித்த மகிந்த ராஜபக்சவின் தலையில் கோளாறு ஏற்பட்டுவிட்டதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.


இந்த கோளாறு காரணமாக மகிந்த ராஜபக்ச, கடந்த காலங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களை சடுதியில் மறந்துவிட்டதாகவும் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.


ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகளுக்காக சரத் பொன்சேகா இன்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.


சுமார் நான்கு மணிநேர விசாரணைகளுக்குப் பின்னர் வெளியேவந்த அமைச்சர் சரத் பொன்சேகா, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனைக் குறிப்பிட்டார்.


இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.


இதன்போது தனக்கு எதுவுமே நினைவில் இல்லை என்ற பதிலை விசாரணைகளின்போது மகிந்த ராஜபக்ச வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Posted in: செய்திகள்