Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகத்துக்கோர் எச்சரிக்கை.அஸ்ஸலாமு அலைக்கும்,


கடந்த 18-08-2018 அன்று கொழும்பில் நடந்த பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் இன்பராசா எனப்படும் புனர்வாழ்வு
அளிக்கப்பட்டு விடுதலையான விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினரும் தற்போது விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான

இவர் தெரிவித்த அப்பட்டமான உண்மைக்கு புரம்பான கருத்துக்கள் அதாவது (2009 ம் இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகள் அச்சத்தில் நாட்டைவிட்டு தப்பியோடும் போது தமது ஆயுதங்களை முஸ்லிம்களிடம் கிடைத்த பணத்திற்கு விற்றதாக கூறியுள்ளார்) இக்கருத்தானது முஸ்லிம் சமூகத்தின் கெளரவத்திற்கும் மதிப்பிற்கும்,பாதுகாப்பிற்கும்,சகோதர சமூகத்துடனான நல்லிணக்கத்திற்கும் ,இனமுறண்பாட்டிற்கு வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது மட்டுமல்லாது பாரிய இனவாத திட்டத்திற்கான ஆரம்ப கட்ட முயற்சியாகவும் நகர்வாகவும் கருதப்படுகிறது .


குறித்த விடயம் சம்பந்தமாக அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் தலைமரைவாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


இருந்த போதும் முஸ்லிம்களாகிய நாம் அவதானமாகவும் நிதானமாகவும் சிந்திக்க வேண்டிய தருணம் இது .காரணம் தமது வாதத்தை உறுதி செய்யும் வகையிலும் சகோதர சமூகத்திடத்தில் எம்மை காட்டி கொடுப்பதற்கான சதித்திட்டங்களை சூட்சுபமாக மேற்கொண்டு வர கூடும்,இதனை முன்னைய வரலாறுகள் படிப்பினையாக சான்றாகவும் உள்ளது


இவர்களைப் பொறுத்தவகையில் நயவஞ்சகம் தீர்ப்பதில் கில்லாடிகள் கடந்த 1990 ஆம் ஆண்டு வடமாகாண முஸ்லிம்களின் கருவறுக்கும் முகமாக புத்திஜீவிகளை படுகொலை செய்தார்கள்,தமிழ் இயக்கங்களுக்கு பலவந்தமாக முஸ்லிம் இளைஞர்களை இணைத்து ஆயுதங்களை கையில் கொடுத்து சிறிய அளவிலான குழு மோதல்களை ஏற்படுத்தி அதனூடாக தம்மை ஆட்சியாளர்களாக ,பாதுகாவலர்களாக காட்டி ஊருக்குள் நுழைந்து சாணக்கியமாக காணிகளுக்குள்ளும், பூட்டியிருந்த வீடுகள் கடைகளுக்கு பின்புறத்திலும் தாங்களே ஆயுதங்களை இரவோடு இரவாக புதைத்து ,பதுக்கி வைத்து விட்டு முஸ்லிம்கள் ஆயுதம் வைத்துள்ளார்கள்,காட்டிக் கொடுக்கிறார்கள் என்ற ஒரு மாயயை தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கிய பின்னர் இதையே தமதுபக்க நியாயமாக காட்டி உடுத்த உடையுடன் இரண்டு மணி நேர அவகாசத்தில் 200/= ரூபாய் பணத்துடன் மிலேட்சத்தனமாக துப்பாக்கி முனையில் வெளியேற்றி விட்டு சொத்துகளையும் சூறையாடி முதலாளிமார்களை சிறைப்பிடித்தார்கள்.


ஆக இந்த பாணியிலான நகர்வுக்கான அடுத்த கட்ட நகர்வாகவே நாம் இதனை கருத வேண்டியுள்ளது இவர்களது பிரித்தாலும் கொள்கையை வரலாறு உணர்த்துவதாகவும் நமக்கு சான்றாக இருக்கிறது.அத்துடன் இவர்களின் பின்புலத்தில் இனவாத குழுக்கள் ,புலம்பெயர் சக்திகள், மற்றும் சில அரசியல்வாதிகள் அரசியல் நிகழ்ச்சி நிரலும் செயற்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது ஆகவே பொதுமக்களாகிய நாமும் எமது ஆண்மீக ,அரசியல்,சமூக தலைமைகள் மற்றும் புத்திஜீவிகள் விழிப்புடனும் எச்சரிக்கையாகவும் செயற்பட வேண்டும் என்பதை அனுபவசாலிகள் என்ற வகையிலும் சர்வதேச அரசியல் கண்ணோட்டதில் அணுக கூடியவர்கள் என்ற ரீதியில் இவ்விடயத்தை நம் சமூகத்தின் நலன் கருதி இப்பதிவின் ஊடாஉங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.ஆகவே சிந்தித்து தூரநோக்கு சிந்தனையுடன் செயற்படுங்கள் குறிப்பாக சமூக வளைத்தளதில் கருத்துகளை பகிர கூடியவர்கள் மிக நிதானமாக நடந்து கொள்ளுமாறும் ஒரு சில கூலிப்படைகளுக்காக எந்த சமூகத்தையோ ,மதத்தையோ ,அவர்களது நம்பிக்கைக்கோ பாதிப்பு வரதா வண்ணம் மிகவும் பேணுதலாக அழகிய முன்மாதிரியான சமூகமாக எம்மை நிலைநிறுத்துமாறு இத்தாள் பணிவுடன் வேண்டி கொள்கிறோம்.

*உறவுக்கு தோல் கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் *
Jaffna Muslim Community International (JMC-I)