காசாவில் மற்றொரு பலஸ்தீனர் இஸ்ரேலால் சுட்டுக் கொலைஇஸ்ரேலை பிரிக்கும் காசா எல்லைப் பகுதியில் கடந்த ஞாயிறன்று மற்றொரு பலஸ்தீனர் இஸ்ரேல் துருப்புகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அந்த பலஸ்தீனர் பாதுகாப்பு வேலிக்கு சேதங்கள் ஏற்படுத்த முயன்றதாக இஸ்ரேல் இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. வடக்கு காசாவைச் சேர்ந்த 32 வயது ஆதப் முஹமது சலாஹ் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

இந்த எல்லை வேலிப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பலஸ்தீனர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது இஸ்ரேல் துருப்புகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது பலஸ்தீன சிறுவன் ஒருவன் கொல்லப்பட்ட நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் தனது பூர்வீக பூமிக்கு திரும்பும் உரிமையை கோரியும் கடந்த மார்ச் 30ஆம் திகதி தொடக்கம் இடம்பெற்று வரும் காசா மக்களின் ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 175 பேர் வரை இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.