Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சிறுவர்களுக்கு ஓர் தினம்!!


ஒக்­ரோ­பர் முத­லாம் திகதி உலக சிறு­வர் தின­மாகக் கொண்­டா­டப்­ப­டு­கி­றது.பன்­னாட்டு அர­சு­கள், அரச சார்­பற்ற நிறு­வ­னங்­கள், முன்­பள்­ளி ­கள்,சிறு­வர் இல்­லங்­கள் மற்­றும் பாட­சா­லை­கள் என அனைத்­துமே இந்தத்தி­னத்தை பொரு­ளுறக் கொண்­டாடி மகிழ்­கின்­றன.

1979 ஆம் ஆண்டு பன்­னாட்டு சிறு­வர் ஆண்­டாக முதன் முத­லில் அறி விப்புச் செய்­யப்­பட்­டது. 1989 ஆம் ஆண்டு 40 உறுப்­பு­ரை­கள் கொண்ட சிறு­வர் உரி­மை­கள் பற்­றிய சம­வா­யம் ஐ.நா.பொதுச் சபை­யால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. இந்தச் சந்­தர்ப்­பத்­திலே இலங்­கை­யும் அதில் தன்னை அங்­கத்­து­வ­மாக இணைத்­துக் கொண்­டது. சிறு­வ­ரின் அடிப்­படை உரி­மை­களை முழு­மை­யா­க­ வும், சரி­யா­க­வும் பெற்­றுக்­கொள்­வதே பன்­னாட்டுச் சிறு­வர் தினத்­தின் முதன்மை நோக்­க­மா­கும்.

சிறு­வர்­கள்
உல­கெங்­கும் வாழ்­கின்ற பதி­னெட்டு வய­துக்­குட்­பட்ட இரு­பா­லா­கும் ‘சிறு­வர்’ என்­னும் வரை­ய­றைக்­குள் உள்­ள­டங்­கு­வர். சிறு­வர்­கள் நாட்­டின் முது­கெ­லும்­பு­கள். நாளை மலர்ந்து சமூக விடி­யல் தர­ வி­ருக்­கும் இன்­றைய அரும்­பு­கள். சமூ­கத்­தை­யும், நாட்­டை­யும், உல­கை­யும் அழ­கா­கச் செதுக்­கு­கின்ற சிற்­பி­கள். பொரு­ளா­தார சிக்­கல்­களை நிவர்த்தி செய்­யப் போகும் வளம்­மிக்க தேச­வி­ரும்­பி­கள். பெற்­றோ­ரின் பொக்­கி­ஷங்­கள். இவர்­க­ளது உல­கம் மகிழ்ச்­சி­யா­ன­தா­யும், வாழ்­வி­யல் முறை­மை­க­ளுக்கு ஏற்­ற­தா­யும் அமை­ய­வேண்­டும்.அன்பு கனிந்த நிறை அர­வ­ணைப்­போடு சிறு­வ­ய­தி­ லேயே பாரம்­ப­ரி­ய­மான பண்­பாட்டு விழு­மி­யங்­களை ஊட்டி வளர்க்க வேண்­டும்.

ஆன்­மி­கப் பாதை­யில் அவர்­களை அழைப்­பித்துத் தின­சரி இறை­யொ­ளி­யில் நாட்­ட­மு­றச் செய்ய வேண்­டும்.இன்­றைய கால ஓட்­டத்­தில் சிறு­வர்­க­ளைப் பற்­றிச் சிந்­திக்க வேண்­டி­யது காலத்­தின் கட்­டாய அழைப்­பா­ணை­யாக அமைவு பெற்­றுள்­ளது. சிறு­வர்­கள் மீதான துன்புறுத்தல்கள் உல­கையே உலுக்­கிப் போடு­கின்­றன. குரு­தியை உறைய வைக்­கின்ற துன்புறுத்தல் நட­வ­டிக்­கைள் இடம்­பெ­று­கின்­றன. சிறு­வர்­கள் உடல், உள ரீதி­யான பாதிப்பை அதி­கம் எதிர்­கொள்­கின்­ற­னர். அவர்­க­ளது மகிழ் களம் காவு­கொள்­ளப்­ப­டு­கி­றது. உடல், உள ஆரோக்­கி­யம் சிதை­வுற்றுச் சேதம் விளை­விக்­கின்­றன.ஆக மொத்­தத்­தில் இன்­றைய கால­வெளி ஆதா­ர­மில்­லாத சோதா­ரம் மிக்க வாழ்­வையே சிறு­வர்­க­ ளுக்­குப் பரி­ச­ளித்­தி­ருக்­கி­றது.

சிறு­வர் வன்­மு­றை­க­ளும் அவை
கொண்­டுள்ள பன்­மு­கத் தன்­மை­யும்
சிறு­வர் துன்புறுத்தல் என்­பது, ஆற­றிவு கொண்ட மனி­தன் மனி­தத் தன்­மை­யின்றித் தனது பதவி அல்­லது மதிப்பை இழந்து சிறு­வரை உடல் உள­ரீ­தி­யாகத் துன்புறுத்துவதைக் குறித்­து­ரைக்­கின்­றது. உற­வி­னர்­கள் கூட,குறிப்­பாக அப்பா, மாமா,அண்ணா,சித்­தப்பா,பாட்­டன் என தமது புனி­த­மான உறவு நிலையை உதா­சீ­னம் செய்­து­விட்டுச் சிறு­வர்­களைத் தவறாகக் கையாளுகின்றனர். தமது மதிப்பையும் இழக்கிறார்கள்.

சிறு­வர் துன்புறுத்தல்கள் பன்­முக தன்­மை­யு­டை­யன. பாலி­யல் அடிமை நிலை, கொலை செய்­தல், தவறான முடிவை எடுத்து உயிரை மாய்ப்பதற்குத் தூண்­டு­தல், கல்வி கற்­கும் உரி­மையை மறுத்­தல்,உட­லில் காயங்­கள் கீறல்­களை ஏற்­ப­டுத்­தல் எனப் பல நிலை­களை கொண்­டுள்­ளன.இருந்­த­போ­தும் பாலி­யல் துன்புறுத்தல் மிக மிகக் கொடூ­ர­மான செயல்­நிலை. கீழ் தர­மா­னது. தொடுகை மூல­மும் தொடுகை இன்­றி­யும் பர­வ­லாக இடம்­பெ­றும் பாலி­யல் துன் புறுத்தல்களுக்கு ஆளா­கும் சிறு­வர்­கள் உடல் உள ரீதி­யான பாதிப்­பு­க­ளைச் சந்­திக்­கின்­ற­னர்.

ஏனைய சிறு­வர்­க­ளோடு சக­ய­மா­கப் பழகி இருந்­திட முடி­யா­த­படி பயம், குழப்­பம், மனச்­சோர்வு, விரக்தி, பழி­வாங்­கல், சினம், வெட்­கம், சல­னம் எனப் பல­வித பாதிப்­பு­களை சந்­திக்­கின்­ற­னர். கல்வி, உணவு, விளை­யாட்டு போன்­ற­வற்­றில் கவ­ன­மின்­மை­யும், விருப்­ப­ மின்­மை­யும் ஏற்­ப­டு­கி­றது. இத­னால் இருண்ட உல­கில் அகப்­பட்­டுக்­கொண்­ட­வர்­கள் போல் ஒதுங்கி வாழ்­கின்­ற­னர்.இவை மட்­டு­மல்­லாது இள­வ­யதுக் கர்ப்­பங்­க­ளும் பாலி­யல் நோய்­க­ளும் கூட ஏற்­பட்டு ஆரோக்­கிய வாழ்வு காவு கொள்­ளப்­ப­டு­கி­றது.

இதை­விட வயோ­தி­பர்­கள் மற்­றும் வாலிப வய­தி­ன­ரின் வார்த்­தை­கள்,பார்­வை­கள் போன்­ற­ன­வும் பாலி­யல் வன்­மு­றை­க­ளில் முன்­னிலை வகிக்­கின்­றன. நீர்­கொ­ழும்பு, அம்­பாந்­தோட்டை, பிலி­யந்­தலை, ஹிக்­ஹ­டுவை போன்ற இடங்­க­ளில் சிறு­வர் மீதான பாலி­யல் வதை­கள் அதி­க­ள­வில் இடம்­பெ­று­கின்­றன. அவற்­றுக்கு ஈடாக வித்­தியா, கிரு­ஷாந்தி,கன­க­ரா­யன் குளம் சிறுமி, எள்­ளுக்­காட்­டுச்­சி­றுமி, காரை­ந­கர் சிறுமி, சாக்­கோட்டை சிறுமி
எனப் பல சிறு­வர்­க­ளின் பாலி­யல் வதைச் சம்­ப­வங்­கள் தமி­ழர் பிராந்­தி­யத்­தில் இடம்­

பெற்­றுள்­ளன.பலத்த அதிர்­வ­லை­க­ளை­யும் சமூக வெளி­யில் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன.இவை­த­விர வெளி­வந்­தவை சில வெளி­வ­ரா­மல் மூடு­தி­ரைக்­குள் ஏரா­ளம் என பல வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. இத­னால் சிறு­வர்­க­ளின் வாழ்­வி­யல் நெறி­மு­றைமை தளம்­ப­லுற்­றுத் தடம்­பு­ரண்டு நிற்­ப­தைக் காண­மு­டி­கி­றது.

சிறு­வர் உரிமை மீறல்­கள்
உல­கின் பல நாடு­க­ளில் பரந்­து­பட்­ட­ள­வில் சிறு­வர்­க­ளின் ஒளி­ம­ய­மான எதிர்­கா­ல­மும்,வாழ்­வி­யல் நெறி­மு­றை­மை­க­ளும் சுரண்­டப்­ப­டு­கி­ன்றன.அவர்­க­ளது குழந்­தைப் பரு­வம் சீர­ழிக்­கப்­ப­டு­கி­றது. சிரியா, ஏமன் போன்ற நாடு­க­ளில் சிறு­வர்­கள் பாலி­யல் தேவைக்கு முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வேத­னை­யோடு வாழ்­கி­றார்­கள். ஏம­னில் 20 இலட்­சம் சிறு­வர்­கள் பட்­டி­னிச்­சாவை எதிர்­நோக்­கி­யுள்­ள­னர்.

மியன்­மா­ரில் இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்­பால் குழந்­தை­கள் வெட்­டிக்­கொலை செய்­யப்­பட்­டுள்­ளார்­கள். பாலி­யல் தேவைக்­குள் உள்­ளீர்க்­கப்­ப­டு­கி­றார்கள். இந்த நாட்­டில் மூன்று தசாப்த கால­மா­கத் தொடர்ந்த உள்­நாட்­டுப் போர் எண்­ணி­ல­டங்­காத சிறு­வர்­களைப் பாலி­யல் தேவைக்­காக பயன்­ப­டுத்­தி­யுள்­ளது.

“சிறு­வர்­க­ளைத் தவறாகக் கையா ளுவதால் அவர்­கள் தங்­க­ளு­டைய குழந்­தைப் பரு­வத்தை அதி­வே­க­மாக எட்­டிக் கடக்­ கின்­ற­னர். உரி­மை­கள் மறுக்­கப்­பட்டு அடிமை நிலை தோற்­றம் பெறு­ கி­றது. அவர்­கள் சிறி­ய­வர்­கள் வளர்ந்­தோர் அல்­லர். அவர்­கள் முக்­கிய காலப் பகு­திக் கூ­டா­கப் பய­ணிக்­கி­றார்­கள்” என உள­வி­ய­லா­ளர் ‘ரூஸோ’ கூறி­யதை அனை­வ­ரும் கருத்­தில் கொள்­ள­வேண்­டும். சிறு­வர்­க­ளின் முக்­கி­ய­மான காலப்­ப­குதி அதீத பாலி­யல் தேவை­யு­டை­யோ­ரால் முளை­யி­லேயே கிள்ளி எறி­யப்­ப­டு­கி­றது. நாளைய தலை­வர்­க­ளின் உறு­தி­யான அடிப்­படை அடித்­த­ளக் கட்­டு­மான உரு­வாக்­கம் என்­பது அத்­திபா­ரக் கற்­க­ளா­கவே பிடி­மா­ன­மின்றி தூக்கி எறி­யப்­ப­டு­கின்­றன. எமது நாட்­டில் தின­சரி மூன்று தொடக்­கம் ஐந்து வரை­யான சிறு­வர்­கள் பாலி­யல் துன்புறுத்தல்க ளுக்கு ஆளா­வ­தாக ஆய்­வு­கள் தெரி­விக்­கின்­றன.

கட­மை­யும்
பொறுப்­பு­ணர்­வும்
சிறு­வர் தினத்­தில் மட்­டும் சிறு­வர்­களை மகிழ்ச்­சிப்­ப­டுத்­தும் தன்­மை­களை விடுத்து ஒவ்­வொரு விநா­டி­யும் அவர்­க­ளுக்குப் பாது­காப்­புக்­கொ­டுக்க வேண்­டும். சிறு­வர் உல­கைப் பாது­காப்­ப­தென்­பது குழந்­தைப் பரு­வத்தைப் பேணிப்­பா­து­காக்­கக் கூடி­ய­தாக உரு­வம் பெற­வேண்­டும்.அதற்­கான தார்­மீ­கப் பொறுப்பு பெற்­றோ­ராக,ஆசி­ரி­யர்­க­ளாக,தொண்டு நிறு­வ­னங்­க­ளாக, ஆன்­மீ­கத் தலங்­க­ளாக, பாட­சா­லை­க­ளாக , குடும்­பங்­க­ளாக,சமூ­க­மாக இடைத் தொடர்பு கொண்டு இயக்­க­மு­று­கின்ற அனை­வ­ர­தும் கைக­ளி­லேயே தங்­கி­யுள்­ளது. இவற்­றுள் ஏதே­னு­மொரு கட்­ட­மைவு வில­கிப்­போ­கு­மி­டத்து சிறு­வர்­க­ளது வாழ்­வி­யல் நெறி­மு­றை­கள் நிலை­மாறி உரு­மா­றிப் போவது தவிர்க்க முடி­யா­த­தா­கி­வி­டும்.

ஆக,சிறு­வர்­கள் மீதான துன்புறுத்தல்க ளைத் தடுப்­ப­தற்கு சட்­டம் பற்­றிய தெளி­வான அறிவை அனை­வ­ரும் பெற்­றுக்­கொள்ள வேண்­டும். அவர்­கள் மீது ஆழ்ந்த அன்­பும் கரி­ச­னை­யும் கொள்ள வேண்­டும். அன்­பு­டன் அர­வ­ணைத்து வாழ­வேண்­டும். நல்­ல­வர்­கள் என யாரை­யும் நம்பி சிறு­வர்­களை ஒப்­ப­டைப்­ப­தை­யும்,அன்­ப­ளிப்­புப் பொருள்­க­ளுக்கு ஏமா­று­வ­தை­யும் தவிர்க்க வேண்­டும். சிறு­வர்­க­ளின் தனிமை நிலை­யைத் தவிர்த்­துக் கொள்ள வேண்­டும். அவர்­க­ளின் நடத்தை மாற்­றங்­க­ளில் அதீத அக்­கறை காட்ட வேண்­டும். பெற்­றோர் பிள்­ளை­க­ளு­டன் தெளிந்த நட்­பு­று­வு­டன் பழக வேண்­டும்.

பிள்­ளை­க­ளுக்­காக நேரத்தை ஒதுக்க வேண்­டும். தனி­யார் வகுப்­பு­க­ளுக்கு அனுப்­பி­விட்டுத் தொலைக்­காட்­சிக்கு முன் அமர்ந்­தி­ருக்­கும் செயல்­நி­லை­களைக் கட்­டா­ய­மாகத் தவிர்க்க வேண்­டும். எல்­லா­வற்­றுக்­கும் மேலாகப் பாலி­யல் துன்புறுத்தலுக்கான தண்­ட­னையை, மீள­வும் மோச­மா­னது எனச் சட்­டம் இடித்­து­ரைக்க வேண்­டும்.

அது­மட்­டு­மல்­லாது அவற்றை விரை­வாக செயற்­ப­டுத்­த­வும் பணி செய்ய வேண்­டும். இவற்றை எல்­லாம் சரி­வர,பொருத்­த­மு­றப் பேணு­மி­டத்து சிறு­வர்­கள் சிறு­வ­ரா­கவே இருப்­பர். பெற்­றோரே இனி­யா­வது விழிப்­ப­டை­யுங்­கள்!