கூகுளின் உதவியுடன் குழந்தைகளுக்கு தாய் செய்த கொடூரம்; அதிரவைக்கும் சம்பவம்

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், கொலை செய்வது பற்றிய தேடல்களை கூகுள் மூலம் பெற்றுக் கொண்டு, தான் பெற்ற குழந்தைகளையே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Alaska-வை சேர்ந்த Stephany E. LaFountain (23) என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் திகதியன்று, தன்னுடைய 4 வயது மகளுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக ஆம்புலன்சிற்கு போன் செய்துள்ளார்.
அங்கு 4 நாட்களாக மருத்துவர்கள் போராடியும் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து Stephany வீட்டில் பொலிஸார் சோதனை மேற்கொண்ட போது, அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அங்கு பொலிஸார் Stephany-ன் கணினியை பரிசோதித்துள்ளனர். அதில், ‘மூச்சு திணறும் வர செய்வது எப்படி?’, ‘ ஆதாரம் இல்லாமல் ஒரு மனிதனை கொலை செய்வது எப்படி?’, கொலை செய்வதற்கான சிறந்த 16 வழிமுறைகள் மற்றும் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கான வழி என்பதை கூகுள் தேடலில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து அவரை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணை மேற்கொள்ளும்போது ஏற்கனவே ஒரு கொலை செய்திருப்பது தெரியவந்தது.
அந்த நேரத்தில் Stephany-ன் பெயர் Bilecki என இருந்தது. 2015-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதியன்று தன்னுடைய 4 மாத குழந்தை திடீரென மூச்சுவிடாமல் இருப்பதாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் குழந்தை அடுத்த சில மணிநேரங்களில் இறந்துள்ளது.
இந்த தாய் குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது குறித்து வேதனையடைந்துள்ளனர்.