வெலிகம தாருல் முஃமினாத் மாதர் சங்கத்தினால் நடாத்தப்பட்டு வருகின்ற அல்-கலம் பாலர் பாடசாலையின் இந்த வருடத்திற்கான சிறுவர் கண்காட்சி


தாருல் முஃமினாத் மாதர் சங்கத்தினால் நடாத்தப்பட்டு வருகின்ற அல்-கலம் பாலர் பாடசாலையின் இந்த வருடத்திற்கான சிறுவர் கண்காட்சி இன்று (10.09.2018) பொது மாக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.


அல்-கலம் பாலர் பாடசாலை அதிபர் திருமதி பஸீஹா ஹஸன் தலைமையில் நடைபெற்ற திறப்பு நிகழ்வில் தாருல் முஃமினாத் மாதர் சங்கத்தின் தலைவி மௌலவியா ஆயிஷா மிஹார்தீன், வெலிகம பிரதேச கல்விக் காரியாலய திட்டமிடல் அதிகாரி திருமதி ஸிரியானி குணரத்ன, வெலிகம முஸ்லிம் ஆரம்ப பாடசாலை அதிபர் திருமதி ஸனூலா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது எடுக்கப்பட்ட காட்சிகளில் சிலதைக் காணலாம்.