மாடு குறுக்காக பாய்ந்ததால் ஏற்பட்ட பாரிய விபத்து (படங்கள்)கிளிநொச்சி - யாழ்ப்பாண வீதியில் ஒரே நேரத்தில் 3 வாகனங்கள் மோதி பாரிய விபத்து ஒன்று
இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் , எல்ப்f வேன் மற்றும் பரந்தன் நோக்கி பயணித்த றோஸா பஸ் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.

மாடு ஒன்று குறுக்கறுத்தமையினால் இவ்விபத்திது இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்விபத்ததுக்கு காரணமான மாடும் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கே காயங்கள் சற்று அதிகமாக காணப்பட்டதாக அறியமுடிகின்றது.

கிளிநொச்சி பொலிசாரின் துரித செயற்பாட்டினால் வாகனப் போக்குவரத்து சீர்செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ARN - Maruthamunai