கத்தாரின் வெளிநாட்டு பணியாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. இனிமேல் கத்தாரை விட்டு வெளியேற 'எக்சிட் பேர்மிட்' தேவையில்லை.


கத்தாரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு பணியாளர்கள் கத்தாரை விட்டு வெளியேற அந்நாட்டு வெளியுறவுத்துறையிடம்
அனுமதி ( Exit Permit) கேட்க வேண்டியது இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

கத்தாரில் லட்சக்கணக்கில் இலங்கையர்கள் மற்றும் இந்தியர்கள் வேலை பார்க்கிறார்கள். இவர்கள் தங்கள் விடுமுறை நாட்களில் நாடு திரும்ப நிறைய விதிமுறைகள் வைக்கப்பட்டு இருந்தது.

கத்தாரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு பணியாளர்கள் கத்தாரை விட்டு வெளியேற அந்நாட்டு வெளியுறவுத்துறையிடம் அனுமதி கேட்க வேண்டியது இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

கத்தாரில் லட்சக்கணக்கில் இந்தியர்கள் வேலை பார்க்கிறார்கள். முக்கியமாக தமிழர்களும், மலையாளிகளும் அதிக அளவில் பணி புரிகிறார்கள். இவர்கள் தங்கள் விடுமுறை நாட்களில் நாடு திரும்ப நிறைய விதிமுறைகள் வைக்கப்பட்டு இருந்தது.

அதன்படி கத்தாரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு பணியாளர்கள் கத்தாரை விட்டு வெளியேற அந்நாட்டு வெளியுறவுத்துறையிடம் அனுமதி கேட்க வேண்டியது இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் விருப்பப்படி நாட்டைவிட்டு கிளம்பலாம் என்று சட்ட எண் 13ல் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பல வருடங்களாக அங்கு வேலை பார்க்கும் ஆசிய பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இனிமேல் கத்தாரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு பணியாளர்கள் கத்தாரை விட்டு வெளியேற அந்நாட்டு வெளியுறவுத்துறையிடம் அனுமதி கேட்க வேண்டியது இல்லை என்ற சட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. இதனால் வெளிநாட்டு பணியாளர்கள் பயனடைவார்கள்.


மேலும், கத்தாரின் டோஹாவில் வரும் 2022 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் கால்பந்து உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.