Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

றோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக இனப் படுகொலையில் ஈடுபட்டதாக மியன்மார் இராணுவம் மீது குற்றம் சாட்டும் ஐ.நா அறிக்கையின் விபரம்.


-லத்தீப் பாரூக்-
2018 ஆகஸ்ட் 27 திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள ஐ.நா. அறிக்கையில மியன்மாரின்;
றோஹிங்யா இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்டு இராணுவம் இனப் படுகொலையில் ஈடுபட்டதாகவும், அந்த நாட்டு இராணுவத்தின் பிரதம தளபதியும் இன்னும் ஐந்து ஜெனரல்களும் அதற்காக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறை ரீதியாக மியன்மாரின் தலைவியாக உள்ள ஆங் சோங் சூகி இந்த இனப் படுகொலைகளைத் தடுக்க தவறி விட்டார் என்றும் இந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


மியன்மாரில் இராணுவத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் அந்த நாட்டின் சிவிலியன் அரசுக்கு குறைவாகவே உள்ளது என்பதை ஏற்றுக் கொண்டுள்ள ஐ.நா அறிக்கையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் மியன்மாரின் ஆறு இராணுவ ஜெனரல்கள் முதல் நிலை குற்றவாளிகளாக நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிக்கையில் ஆங் சாங் சூகியின் சிவிலியன் அரசு மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களால் கண்டிக்கப்பட்டுள்ளது. 'இந்த அரசின் சிவில் அதிகாரிகள் தமது செயற்பாடுகள் காரணமாகவும,; செயற்படா நிலைகள் மூலமாகவும் குற்றங்கள் இழைக்கப்படுவதற்கு பங்களிப்புச் செய்திருக்கின்றார்கள்' என்று ஐ.நா அறிக்கை கூறுகின்றது.
றோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான மியன்மார் இராணுவத்தின் செயற்பாடுகள் ஏற்கனவே சர்வதேச சமூகத்தின் பரவலான கண்டனத்துக்கு ஆளானது. 2015 ஆகஸ்ட் 25ல் றாக்கின் மாநிலத்தில் தொடங்கப்பட்ட இந்த இன ஒழிப்பை ஐ.நா அதிகாரிகள இன ஒழிப்புக்கான ஒரு பாடப்புத்தக சம்பவம் என்று வர்ணித்திருந்தனர்.


மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் காரணமாக பெருமளவான றோஹிங்யா முஸ்லிம்கள் அண்டை நாடான பங்களாதேஷ் நோக்கி படை எடுத்தனர். அவர்களுக்கு பங்களாதேஷ் அரசும் அரச சார்பற்ற அமைப்புக்கள் பலவும் போதிய ஆதரவை அளித்தன. இருப்பினும் கூட அடிப்படை வசதிகளும் உரிமைகளும, குடி உரிமையும்; இன்றியே அவர்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.


ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீனமான மூன்று பேரைக் கொன்ட ஒரு குழுவே பல்வேறு விடயங்களை சுதந்திரமாக ஆராய்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த சர்வதேச சுயாதீன விசாரணைக் குழு 800க்கும் மேற்பட்ட சாட்சியங்களை செவியுற்று பல்வேறு தரவுகளையும் ஆவணங்களையும் மிகத் தீவிரமாக நியாயமான முறையில் பரிசோதித்தே இந்த அறிக்கையை தயாரித்துள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது.


துன்புறுத்தல்களும் வன்முறைகளும் கட்டுக்கடங்காமல் இடம்பெற்றுள்ளன என்பதற்கு போதிய அளவு ஆதாரங்கள் உள்ளன. இந்த விசாரணைக்குழ முன்னிலையில் சாட்சியம் அளித்த ஒரு பெண் தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று குறிப்பிட்டுள்ளார். காரணம் தான் மூன்று பேரால் மட்டுமே கற்பழிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏனைய பெண்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளின் அளவை பிரதிபலிப்பதாக இவரின் சாட்சியம் அமைந்துள்ளது என்று விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.


'மியன்மாரின் றோஹிங்யா பொது மக்களை அச்சுறுத்தி அவர்கள் மீது பயங்கரவாதத்தை பிரயோகிப்பதற்கான ஒரு அடிப்படை மூலோபாயமாக மிகக் கொடுமையான விதத்தில் கற்பழிப்புக்களும் வன்முறைகளும் இடம் பெற்றுள்ளன' என்று ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ராதிகா குமாரசுவாமி ஆகஸ்ட் 27ம் திகதி ஜெனீவாவில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போது கூறினார். குறிப்பாக இராணுவம் தான் இவ்வாறான காரியங்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். மியன்மாரின் உள்ளுர் மொழியில் இராணுவத்தைக் குறிப்பிட பயன்படுத்தப்படும் வார்த்தையான வுயவஅயனயற என்ற சொல்லையும் அவர் பயன்படுத்தி உள்ளார்.


மியன்மாரில் இன்றைய நிலைமைகளை சீர் செய்வதற்கு மிக அவசரமாக பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தைச் சார்ந்ததாக உள்ளது. அவ்வாறு செய்யத் தவறின் அதன் ஜனநாயகச் சீர்திருத்தச் செயற்பாடுகள் ஆபத்தை எதிர் கொள்ள வேண்டி இருக்கும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.


'பல தசாப்தங்களாக ஏற்படுத்தப்பட்டு வந்த பேரழிவு தான் இப்போது இடம்பெற்றுள்ளது' என்று ஐ.நா அறிக்கை வாதிடுகின்றது. நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு முறையான ஒழுங்கமைப்பின் கீழ் பிறப்பு முதல் இறப்பு வரையான கடுமையான கொடிய முறைகள் பிரயோகிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள விசாரணைக்குழ அதன் முழு விவரங்கள் கொண்ட அறிக்கையை செப்டம்பர் 18ல் வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளது. அன்றைய தினமே அந்த அறிக்கை ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஐ.நா பாதுகாப்புக் கவுனஸில் என்பனவற்றிடமும் கையளிக்கப்படும்.


மியன்மாரின் உள்ளக பிரிவு ஒருங்கிணைப்புக் குழு (ஐளுஊபு) தெரிவித்துள்ள தகவலின் படி கடந்த பல வருடங்களில் மியன்மாரின் றாகின் மாநிலக் கிரமாங்களில் இருந்து 919000 பேர் வெளியேற்றப் பட்டுள்ளனர். இவர்கள் பங்களாதேஷின் உல்லாசப் பயணத்துறைக்கு பேர் போன கடற்கரை பிரதேசமான கொக்ஸ் பஸார் பகுதியில் உள்ள 32 முகாம்களில் வாழுகின்றனர். இந்தப் பகுதியில் ஏற்கனவே மியன்மாரில் இருந்து வெளியேற்றப்பட்ட 300000 றோஹிங்யா மக்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


றோஹிங்யா இன பெண்களும,; யுளுவதிகளும் இராணுவத்தாலும் ஏனைய காடையர் கும்பல்களாலும் கற்பழிக்கப்பட்ட நிலையில் இங்கு வந்து சேர்ந்து இப்போது பல குழந்தைகளும் பிரசவமாகி உள்ளன. இந்த விடயம் தஞ்சம் புகுந்துள்ள அகதிகள் மத்தியிலும் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மத்தியிலும் ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாகவும் உருவாகி வருகின்றது.
முகாம்களில் இப்போது சனத்தொகை கூடியுள்ளது.


இதனால் அங்கு கிடைக்கும் வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மலசல கூட வசதிகள் உற்பட ஏனைய உற்கட்டமைப்பு வசதிகளும் சுகாதாரப் பராமரிப்பு வசதிகளும் பாரிய சவாலை எதிர் கொண்டுள்ளன. றோஹிங்யா மக்களுள் சுமார் இரண்டு லட்சம் பேர் தஞ்சம் புகுந்துள்ள இடம் பருவ மழை காலத்தில் மண்சரிவு ஆபத்தையும் எதிர் நோக்கி உள்ளது. மிகவும் மென்மையான மண்பகுதிகளில் அவசர அவசரமாக எந்த திட்டமிடலும் இன்றி மூங்கில்களால் நிறுவப்பட்ட கூடாரங்களிலேயே இவர்கள் வசித்து வருகின்றனர்.


இந்த அகதிகள் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்ப அனுப்பப்படலாம் என்ற நம்பிக்கையும் தற்போது இழக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டில் மியன்மாரில் றோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்டின் இராணுவம் இழைத்த கொடுமைகளுக்கு பொறுப்பேற்று அந்த நாட்டின் தலைவி ஆங் சாங் சூகி பதவி துறந்து செல்வதே சிறந்தது என ஐ.நா மனித உரிமையாளர் பதவியில் தனது கடமைகளை நிறைவு செய்து செல்லும் ஆணையாளர் செயித் றாத் அல் ஹிஸேன் தெரிவித்துள்ளார்.


றோஹிங்யாக்கள் விடயங்கள் பற்றி பொதுவாகப் பேசுவதற்கு கிடைத்த பல சந்தர்ப்பங்களை ஆங்சோங் சூகி தவறவிட்டுள்ளார். மாறாக அந்த விடயங்களை மூடி மறைப்பதற்கும் அதில் சம்பந்தப்பட்டவர்களை மன்னிப்பதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஆழ்ந்த கவலை அளிக்கின்றன. அதை விட அவர் மௌனமாக இருந்திருக்கலாம். அவறால் இந்த விடயத்தில் ஏதாவது செய்திருக்கலாம். இந்த விடயத்தில் அவர் ராஜினாமாச் செய்திருந்தால் அதுவே சிறப்பானதாக இருந்திருக்கும் என்று றாத் அல் ஹுஸேன் தெரிவித்துள்ளார்.


மியன்மார் இராணுவத்தின் பேச்சாளராக அவர் மாறி இருக்கத் தேவை இல்லை. இது தவறான தகவல்களின் மேல்முனை. மேலும் இவை கட்டுக் கதைகள் என்று அவர் குறிப்பிட்டிருக்கத் தேவை இல்லை என்றும் ஹுஸேன் கவலை வெளியிட்டுள்ளார்.


மியன்மார் இராணுவத்தின் அட்டூழியங்களை கண்டு கொள்ள சூகி தவறி உள்ளார். ஆனால் கடந்த வாரம் சிங்கப்பூரில் இடம்பெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய அவர், முஸ்லிம் சமூகத்தின் மீது குற்றம் சாட்டி மேற்கொள்ளப்பட்ட தனது அரசாங்கத்தின் பிரசாரங்களை நியாயப்படுத்தி உள்ளார். பாதிக்கப்பட்ட இனக்குழுவை அதற்குரிய பெயரைக் கொண்டு (முஸ்லிம்கள் என்று) குறிப்பிடவும் அவர் விரும்பவில்லை என்பதை அவரின் உரை மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது. ஐ.நா பொதுச் சபை உற்பட பல பொது அரங்குகளில் அவர் இந்த விடயங்கள் பற்றி வாய் திறக்கவே இல்லை.
ஐ.நா அறிக்கைக்கு சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. மியன்மார் இராணுவம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவை
வரவேற்றுள்ளன.


மனித உரிமை கண்கானிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை, சேவ் த சில்றன், பிரிட்டனில் செயற்படும் மியன்மார் உரிமைகளை பலப்படுத்தும் பிரசார அமைப்பு என்பன மியன்மார் இராணுவத்தை சர்வதேச நீதிமன்றம் விசாரணைக்கு உற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளன. பிரிட்டன் அமைப்பின் பணிப்பாளர் பார்க் பார்மனர் மியன்மார் மீதான சர்வதேச விசாரணைகளுக்கு பிரிட்டிஷ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.'பிரிட்டிஷ் அரசு நீதிக்கும் பொறுப்புக் கூறுலுக்கும் ஆதரவளிப்பதாகக் கூறிக் கொண்டு மியன்மாரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் விடயத்துக்கு ஆதரவளிக்காமல் வெறுமனே இருந்து விட முடியாது. மியன்மாரில் இடம்பெற்ற சம்பவங்களைப் போன்ற விடயங்களை விசாரிக்கத்தான் அந்த நீதிமன்றம் உருவாக்கப்பட்டது' என்று பார்க் பார்மனர் தெரிவித்துள்ளார்.


மனித உரிமைக் கண்கானிப்பகத்தின் ஆசியா பணிப்பாளர் 'ஐ.நா விசாரணைக் குழுவின் சக்தி மிக்க அறிக்கை மற்றும் அதன் தெளிவான சிபார்சுகள் என்பன மியன்மாரில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக குற்றவியல் சட்டம் பிரயோகிக்கப்பட வேண்டியதை வலியுறுத்தி நிற்கின்றன. அவை வெறும் வார்த்தைகளால் கண்டிக்கப்பட வேண்டிய அல்லது கவலை தெரிவிக்கப்பட வேண்டிய விடயங்கள் அல்ல' என்று தெரிவித்துள்ளார்.


சர்வதேச, பக்கச்சார்பற்ற, சுதந்திரப் பொறிமுறையைக் கொண்ட ஒரு விசாரணை மன்றம் அவசரமாக நியமிக்கப்பட வேண்:டும். அதன் மூலம் பாரிய அளவிலான குற்றங்களுக்கு மிகவும் காரணமாகவும் பொறுப்பாகவும் இருந்தவர்கள் தப்பிச் செல்வது தவிர்க்கப்பட வேண்டும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


மியன்மாரில் பெண்கள் மீது இழைக்கப்பட்ட பாலியல் வன்முறைகளை ஐ.நா செயலாளர் நாயகம் தொடர்ந்து கோடிட்டுக் காட்டியுள்ளதை பிரிட்டனில் செயற்படும் மியன்மார் உரிமைகளை பலப்படுத்தும் பிரசார அமைப்பு வரவேற்றுள்ளது. ஆனால் அது தொடர்பாக செயலாளர் நாயகம் எந்த செயற்பாட்டையும் முன்னெடுக்கத் தவறியுள்ளார் என்பதையும் அது கவலையோடு சுட்டிக்காட்டி உள்ளது. மியன்மாரில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் மற்றும் கற்பழிப்புக்கள் பற்றி விசாரிப்பதற்கு புறம்பான ஒரு ஐ.நா ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது. மியன்மார் அரசு அதன் சொந்தக் குற்றங்களை ஒரு போதும் விசாரிக்க முன்வராது. எனவே அது குறித்து ஐ.நா நடவடிக்கை அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இனரீதியாக பெண்களுக்கும் யுவதிகளுக்கும் எதிரான ஒரு ஆயுதமாக பாலியல் வன்முறைகளை மியன்மார் இராணுவம் தொடர்ச்சியாக பிரயோகித்துள்ளமை தெளிவாகி உள்ளது. மியன்மார் இராணுவத்தின் உறுப்பினர்கள் விடுபாட்டு உரிமையோடு இதைச் செய்துள்ளனர் என்பதும் தெளிவாகின்றது.


சுகுமு மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் கெரி கென்னடி 'மியன்மாரின் கற்பழிப்பாளர்களும் கசாப்புக்கடைக்காரர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


'கடந்த பத்து தினங்களை நான் மியன்மாரிலும் பங்களாதேஷிலும் செலவிட்டேன். அங்கு நான் பல அகதிகளையும் இடம்பெயர்ந்து வாழுகின்றவர்களையும்; சந்தித்துப் பேசினேன். அவர்கள் றாகின் மாநிலத்தின் றோஹிங்யா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மனித உரிமை பாதுகாப்பாளர்கள் அரச அதிகாரிகள் பலரையும் சந்தித்தேன். றோஹிங்யா மக்கள் மீது நடத்தப்பட்ட பாரிய அளவிலான தாக்குதல்கள் பற்றி அவர்களுடன் பேசினேன்.


அங்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காகவும் குற்றங்களுக்காகவும் மியன்மார் இராணுவத்தின் மீது பொறுப்புக் கூறல் நடவடிக்கைகள் எடுக்கப்படாதவரை அங்கு எதுவுமே செய்ய முடியாது. மிகவும் சுதந்திரத்தோடும் சுபிட்சத்துடனும் கூடிய அபிலாஷைகளுடன் உள்ள மேற்குலகோடு தொடர்புபட்ட நாடுகளால் மியன்மாரில் இடம்பெற்ற இனஒழிப்பு கொடுமைகளையும் அந்த குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு விடுபாட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளதையும் முழுமையாக புரிந்து கொள்வது கஷ்டாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.