மனைவியுடன் சண்டை... தற்கொலை செய்துகொண்ட கணவன்.


பொகவந்தலாவையில் மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் தற்கொலை
செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் ராஜு என்ற 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தினமும் குடிபோதையில் வீட்டிற்கு வரும் கணவனுடன் மனைவி சண்டையிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் அவ்வாறான சண்டைக்கு பின்னர், கணவர் உறங்கியுள்ளார்.

எனினும் காலை 7 மணியளவில் அவர் வீட்டிற்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.