வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருகிறீர்களா..? இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்
வெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர்.


வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் பொருட்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பயணிகளை கேட்டுள்ளனர்.


மரக்கறிகள், இறைச்சி, மீன், பழங்கள் போன்றவைகள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரும் போது, அவற்றினை கொள்வனவு செய்த நாடுகளில் அது தொடர்பான சிறப்பு சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.


சிறப்பு சான்றிதழ் இன்றி கொண்டு வரப்படும் அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு விவசாய திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். பின்னர் அவற்றினை அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுங்க பேச்சாளர் சுங்க ஜயரத்ன தெரிவித்துள்ளார்.


இலங்கை மக்களை வெளிநாட்டு கிருமிகள், நோய்களிலிருந்தும் பாதுகாப்பதற்காகவும், இலங்கை பயிர் செய்கைகளை காப்பற்றுவதற்காகவும், பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேற்கத்திய நாடுகள் போன்று அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் சட்டம் உரிய முறையில் செயற்படுத்தப்படும். தவறுதலாக நாங்கள் கொண்டு செல்லும் பாதணியில் எங்கள் நாட்டு மண் ஒட்டியிருந்தால் அதற்கும் வெளிநாடுகள் சட்டத்தை செயற்படுவதாக சுங்க பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை நேற்றையதினம் வெளிநாட்டிலிருந்து பெண்ணொருவரினால் கொண்டுவரப்பட்ட பல்வேறு பொருட்கள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது