குழந்தையுடன் ஐ.நாவில் பங்கேற்ற நியூசி. பிரதமர்


ஐ.நா பொதுச் சபை கூட்டத்துக்கு குழந்தையுடன் வந்த பெண் தலைவர் என்ற வரலாற்றை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் படைத்துள்ளார்.

பதவியில் இருந்தபோதே குழந்தை பெற்றுக் கொண்ட பெண் தலைவர் என்ற கவுரவத்தை, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோவுக்கு அடுத்தபடியாக பெற்றவர் ஜெசிந்தா அர்டெர்ன்.

இவர் தற்போது நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐ.நாவின் பொதுச் சபை கூட்டத்திற்கு தமது 3 மாத கைக்குழந்தையுடன் சென்று கலந்து கொண்டுள்ளார். பெண் தலைவர் ஒருவர் ஐ.நா. கூட்டத்தில் குழந்தையுடன் பங்கேற்பது இதுவே முதல் முறை என்பதால், ஜெசிந்தா வரலாறு படைத்துள்ளார்.

அவரது குழந்தைக்கு, நியூசிலாந்தின் முதல் குழந்தை என ஐ.நாவின் அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.