கூட்டு எதிரணியின் பேரணி தொடர்பில் பல்வேறு தகவல்கள்...

அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணியினர் எதிர்வரும் 5ஆம் திகதியன்று மேற்கொள்ளவுள்ள பேரணி தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.இந்த பேரணியை நடத்துவது குறித்த இடம் கூட்டு எதிரணியினரால் அறிவிக்கப்படவில்லை.


பேரணிக்கு எதிராக அரசாங்கம் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளுமா? என்ற அச்சம் காரணமாகவே அவர்கள் முன்கூட்டியே இடத்தை அறிவிக்காமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


பேரணியை நடத்துவதற்காக ஐந்து இடங்களை கூட்டு எதிரணி கோரியுள்ளது.


இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்றே இடம் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


பெரும்பாலும் பேரணி, காலிமுகத்திடலில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில் குறித்த 5ஆம் திகதி பேரணிக்கு பொதுமக்கள் வருவதை தடுக்கும் முகமாக மேல்மாகாணத்தின் தனியார் பேருந்துகள் விசேட சேவைகளை நடத்த முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.


நேற்று முதல் எதிர்வரும் 8 ஆம் திகதிவரை இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.