ஜனாதிபதி முன், பொலிஸ் மா அதிபர் நடனமாடுகின்றார் - போட்டுத் தாக்கும் கோத்தபாய


பொலிஸ் மா அதிபரின் செயற்பாடு குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.தற்போதைய பொலிஸ் மா அதிபரின் செயற்பாடு, பொலிஸ் பதவிக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கோத்தபாய தெரிவித்துள்ளார்.


கொடகவெல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சமகாலத்தில் பாதாள குழுவினர் ஆட்சி செய்கின்றார்கள், போதைப்பொருள் நாட்டில் உள்ளதென்றால் எப்படி நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்க போகின்றது. பொலிஸ் மா அதிபரின் செயற்பாடு மோசமாக உள்ளது. கண்டி பெரஹெரவில் தனது சீரூடையை அணிந்து கொண்டு ஜனாதிபதி முன்னால், பொலிஸ் மா அதிபர் நடனமாடுகின்றார்.


இது பூஜித ஜயசுந்தரவுக்கு செய்கின்ற அவமதிப்பு அல்ல. இது பொலிஸ் பதவிக்கு செய்கின்ற அவமதிப்பாகும். அது மாத்திரமின்றி தலதா மாளிகையில் நடைபெறும் பெரஹெர என்பது எவ்வளவு புனிதமான ஒன்றாகும். ஜனாதிபதி கலந்து கொள்ளும் எந்தவொரு இடத்திலும் அவர் பாடல் பாடுகின்றார்.


ஊ கூச்சலிடும் போது பாடல் பாகின்றார். இதுவா பொலிஸ் மா அதிபரின் செயற்பாடு. இவர் எப்படி சட்டத்தை உறுதி செய்வார்.


இந்த நாட்டில் அரசாங்கம் ஒன்று உள்ளதென கூறுவதற்கே முடியாமல் உள்ளதென கோத்தபாய மேலும் தெரிவித்துள்ளார்.


அண்மைக்காலமாக நல்லாட்சி அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் செயற்பாட்டினை ராஜபக்ஷ தரப்பினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.