வெலிகம பொலீஸ் பிரிவிற்கு உற்பட்ட சனசமூக பொலீஸ் சேவை தொடர்பான அறிவுறுத்தல் செயலமர்வு.

பிரதமர் காரியாலயத்தின் கீழ் இயங்கும் தேசிய சமாதான பேரவை மற்றும் இலங்கை பொலீஸ் தலைமையகம்
இணைந்து நடாத்தும் இச் செயலமர்வு இன்று வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்றது.

 வெலிகம பிரதேச மட்ட சமாதான பேரவையில் இதுவரை 40 அங்கத்தவர்கள் அங்கம் வகிக்கின்றனர். இதில் அங்கத்தவர்களாக மத தலைவர்கள்,அரச உத்தியோகத்தர்,பொலீஸ் அதிகாரிகள்,மற்றும் சமூக சேவை உத்தியோகத்தவர்களாவர்

இன்றைய கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் தெரிவு மற்றும் இனங்களுக்கு இடையிலான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் வெலிகம பிரதேசத்தில் எவ்வாறு முன்னெடுத்து செல்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இன் நிகழ்வில் இலங்கை சனசமூக பொலீஸ் பிரிவின் தலைவர் பிரியங்கா டி சில்வா கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது