ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் கிண்ணம் இலங்கை அணிக்கு



சிங்கப்பூரின் OCBC அரங்கில் இன்று (9) நடைபெற்று முடிந்திருக்கும், 11ஆவது ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் மைதானச் சொந்தக்காரர்களான சிங்கப்பூர் வலைப்பந்து அணியினை 69-50 என்கிற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்திருக்கும் இலங்கை வலைப்பந்து அணி ஆசிய வலைப்பந்து தொடரின் சம்பியனாக 5ஆவது முறை நாமம் சூடியுள்ளது.

இம்மாதம் முதலாம் திகதி தொடக்கம்நடைபெற்று வரும் இந்த ஆசியவலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின்அரையிறுதிப் போட்டிகளில், நடப்புச் சம்பியன் மலேசியாவினைதோற்கடித்த சிங்கப்பூர் அணியும்,ஹொங்கொங் அணியினைதோற்கடித்த இலங்கை அணியும்இறுதிப் போட்டிக்குதெரிவாகியிருந்தன.

ஆசியாவில் முதல் நிலைவலைப்பந்து அணிகளில் ஒன்றாகஇருக்கும் சிங்கப்பூர் அணி, இந்தவலைப்பந்து தொடரின் கிண்ணப்பிரிவுக்காக, முன்னர் இடம்பெற்றபோட்டியொன்றில் இலங்கைவலைப்பந்து அணியுடன்தோல்வியுற்றிருந்த அதேவேளைஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப்தொடரிற்கு முன்னதாக இந்தஆண்டின் நடுப் பகுதியில்இலங்கையில் நட்புரீதியாகஇடம்பெற்ற அழைப்பு வலைப்பந்துதொடரிலும் இலங்கையிடம் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்திருந்தது.

இவ்வாறான தோல்விகளால், இலங்கை வலைப்பந்து அணியின்ஆதிக்கமே இறுதிப் போட்டியிலும்இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும், சொந்த மைதானஅனுபவங்களோடு சிங்கப்பூர்வலைப்பந்து அணி இறுதிப்போட்டியின் முதல் கால் பகுதியினை16-16 என்ற புள்ளிகள் கணக்கில்இலங்கையுடன் சமநிலை செய்தது.

போட்டியின் இரண்டாம் கால்பகுதியில் விரைந்து செயற்பட்டஇலங்கை வலைப்பந்து அணிசார்பாக தர்ஜினி சிவலிங்கம் முதல்புள்ளியினை பெற்று தனதுஅணியின் புள்ளிகள் வேட்டையைதுவக்கி வைத்தார்.

தொடர்ந்து இரண்டாம் கால் பகுதியில்சிறந்த தாக்குதலை வெளிப்படுத்தியஇலங்கை வலைப்பந்து அணி, இந்தகால் பகுதியிலும் முதல் கால் பகுதிபோன்று 16 புள்ளிகளை மொத்தமாகஎடுத்தது. எனினும், மைதானசொந்தக்காரர்களால் 10 புள்ளிகளைமாத்திரமே பெற முடிந்தது.

இதன்படி, போட்டியின் முதற் பாதிஇலங்கை வலைப்பந்து அணியின்ஆதிக்கத்தோடு 32-26 எனநிறைவுற்றது.


முதல் பாதி: இலங்கை 32-26 சிங்கப்பூர்

மூன்றாம் கால் பகுதியின் புள்ளிகள்நுழைவாயிலை சிங்கப்பூர் திறந்துவைத்த போதிலும், இலங்கைவலைப்பந்து அணி தமது அசுரஆட்டத்தினை இந்த கால் பகுதியிலும்தொடர்ந்தது. இலங்கை வலைப்பந்துஅணிக்காக சத்துரங்கி ஜயசூரியவிரைவான பந்துப் பரிமாற்றங்கள்மூலம் புள்ளிகள் பெறுவதில் உதவஇலங்கை அணி போட்டியின்மூன்றாம் கால் பகுதியில் 18 புள்ளிகளை எடுத்தது.

இதேவேளை, சிங்கப்பூர் 12 புள்ளிகளை மாத்திரமே பெற குறித்த பகுதி ஆட்டம் 50-38 என்கிற புள்ளிகள்கணக்கில் இலங்கையின்முன்னிலையுடன் நிறைவுற்றது.

தொடர்ந்து போட்டியின் நான்காம்கால் பகுதியிலும் தமது ஆதிக்கத்தைமுன்னெடுத்த இலங்கை வலைப்பந்துஅணி, 19 புள்ளிகளை பெற்றதுடன்சிங்கப்பூர் 12 புள்ளிகளை மட்டுமேஇறுதி கால் பகுதியில் எடுத்தது.

இதன்படி 69-50 என்கிற புள்ளிகள்கணக்கில் இறுதிப் போட்டியில்இலங்கை வலைப்பந்து அணி வெற்றிபெற்றதுடன், ஆசிய வலைப்பந்துசம்பியன்ஷிப் தொடரின் புதியசம்பியன்களாகவும் மாறியது.


முழு நேரம் : இலங்கை 69-50 சிங்கப்பூர்

கடந்த ஆண்டுகளில் பல்வேறுசரிவுகளை சந்தித்த இலங்கைவலைப்பந்து அணி, புதியபயிற்சியாளர் திலகா ஜினதாசவின்ஆளுகைக்கு உட்பட்டு குறுகியகாலத்திற்குள் மேற்கொண்ட கடினபயிற்சிகள் மற்றும் அனுபவ வீராங்கனை தர்ஜினி சிவலிங்கத்தின் அணிக்கான மீள் வருகை என்பவற்றின் மூலம் சிறந்த மாற்றம் கண்டு ஆசிய வலைப்பந்துசம்பியன்ஷிப் தொடரின் புதியசம்பின்களாக நாமம் சூடியிருப்பது குறிப்பிடத்தக்கது