தேசிய விருதுடன் இங்கிலாந்து மகாராணியின் கரங்களால் சர்வதேச விருது பெற பயணிக்கும் ரஸ்னி ராஸிக் : இலங்கை திருநாட்டிற்கோர் அறிவுப் பொக்கிஷம்


சிறுவர் வழிநடாத்தல் மற்றும் ஆலோசனை வழங்குனர், சமூக செயற்பாட்டாளர், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு (UNHCR) இன் இலங்கையிலுள்ள Muslim Aid உடன் இணைந்த அகதிகளுக்கான அமைப்பின் ஆலோசகருமான இளம் பெண்மணி ரஸ்னி ராஸிக், Junior Chamber International (JCI) வழங்கிய “சிறுவர்களுக்கான பங்களிப்பு, உலக சமாதானம், மற்றும் மனித உரிமைகள்” தேசிய விருதை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் பேராசிரியர் சுஜீவ அமரசேனவின் கரங்களால் வென்றுள்ளார்
தான் கற்ற கல்வி மூலமும், பரம்பரை பரம்பரையாக சமூக தொண்டாற்றுவதில் தனது குடும்பம் காட்டிவரும் உத்வேகம் மூலமும், இயல்பிலேயே சிறுவர்களின் கல்வி விவகாரங்களிலும், வாழ்வாதார மேம்பாட்டிலும் கவனம் செலுத்தும் தனது மனப்பாங்குமே இவ்விருதை வெல்ல துணை செய்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.