Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சட்டவிரோதமான முறையில் பதிவேற்றப்பட்ட 87 இலட்சம் குழந்தைகளின் நிர்வாணப் படங்கள் பேஸ்புக் சமூக வலைத்தளத்திலிருந்து நீக்கம்

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில், குழந்தைகளின் நிர்வாண படங்கள் பெருமளவில் காணப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து கடந்த 3 மாதங்களில் 87 இலட்ச குழந்தைகளின் நிர்வாண படங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில், குழந்தைகளின் நிர்வாண படங்கள் பெருமளவில் காணப்படுவதாக புகார் எழுந்தது. இதைக் கண்ட உபயோகிப்பாளர்கள் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனத்தின் கவனத்துக்கு எடுத்துச்சென்றனர். அது மட்டுமல்ல, காமன்ஸ் ஊடகக்குழுவின் தலைவர் டேமியன் காலின்ஸ், இதற்காக ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தை கடுமையாக சாடினார். இது தொடர்பாக பி.பி.சி. ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில், ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் ரகசிய குழுக்களால் குழந்தைகளின் ஆபாச படங்கள் பகிர்ந்து கொள்ளப்படுவது தெரிய வந்தது. 

இதையடுத்து கடந்த 3 மாதங்களில் 87 லட்ச குழந்தைகளின் நிர்வாண படங்கள் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக இதற்கெனவே அந்த நிறுவனம் ஒரு மென்பொருள் உருவாக்கி உள்ளது. அந்த மென்பொருள், ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்துக்கு எந்தவொரு குழந்தையின் நிர்வாண படங்களோ, ஆபாச படங்களோ வந்தால், அதைத் தானாகவே நீக்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more »

இலங்கையில் பேஸ்புக் சமூக வலைத்தளத்திற்கு தடையா…? அரசாங்கம் சொல்வது என்ன?



இலங்கையில் சமூகவலைத்தளமான பேஸ்புக் தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி இருந்தது.எனினும் அதனை மறுக்கும் அரசாங்கம், அது போலியான தகவல் என அறிவித்துள்ளது.

இது விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ இந்தத் தகவலை வெளியிட்டார்.இலங்கையில் பேஸ்புக் அல்லது வேறு எந்த ஒரு சமூகவலைத்தளத்தையும் தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Read more »

எரிபொருட்களின் விலை தொடர்பில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு….!!

எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர், அதனை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை குறைவடையும் போது, அதற்கான இலாபத்தை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் எரிபொருள் விலை சூத்திரம் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், இந்த விலைச்சூத்திரத்தின் ஊடாக பொதுமக்களுக்கு எவ்விதமான நன்மையும் கிடைக்கப் பெறாது, அரசாங்கத்தின் வருவாயினை மேலும் ஈட்டி கொள்வதற்காகவே குறித்த விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும், முறையற்ற விதத்தில் அரசாங்கம் அறவிடும் வரிகளுக்கு மேலும் வலுச் சேர்ப்பதாகவே இது அமைந்துள்ளதாகவும் ஒன்றிணைந்த எதிரணி கடும் விமர்சனங்களை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Read more »

இந்திய தம்பதியின் உயிரைப் பறித்த செல்பி மோகம்….!! 800 அடி பள்ளத்தாக்கில் வீழ்ந்து பரிதாப மரணம்….!!



உலக அளவில் செல்பி மோகத்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. செல்பியால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன்மீதான மோகத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பலரும் விளக்கி வந்தாலும் பலரும் அதன் ஆபத்தை உணரவில்லை. செல்பியின் மோகத்தினால், இந்திய தம்பதி தங்கள் உயிரையே பறிகொடுத்துள்ளனர்.அமெரிக்காவில் வாழும் இந்திய தம்பதிகளான விஷ்ணு விஷ்வநாத், மீனாட்சி மூர்த்தி பலதரப்பட்ட சுற்றுலாத்தளங்களுக்கும் சென்று தங்களது அனுபவங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக யோசெமைட் தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்று மலைப்பகுதியின் முகடில் ஆபத்தான நிலையில், செல்பி எடுத்துள்ளனர்.அப்போது எதிர்ப்பாராத விதமாக 800 அடி பள்ளத்தாக்கில் இருவரும் விழுந்து உயிரிழந்துள்ளனர். அந்த சுற்றுலா தளத்தில் தடுப்புகள் ஏதும் இல்லை என்பதும் இவர்களின் மரணத்துக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களது உடல்களை மீட்ட மீட்புக்குழுவினர், மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more »

பரபரப்பான அரசியல் சூழலில் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை…!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளைய தினம் கூடவுள்ளது.கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது இல்லத்தில் கூடவுள்ள இந்த கூட்டத்தில் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளன.


அத்துடன், கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் புதிய அமைப்பாளர்களை நியமித்தல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்தார்.

அதேவேளை, சுதந்திரக் கட்சிலிருந்து நீக்கப்பட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர் பதவிகளிலிருந்து தூக்கப்பட்டவர்களுக்கு மீள்நியமனம் வழங்குவது குறித்து தீர்க்கமான முடிவெடுக்கப்படவுள்ளது.
Read more »

நிதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த!

நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சராக பொறுப்பேற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சரவை நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பதவியேற்றது. அதன்படி, நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றுக் கொண்டார்.


இந்நிலையில் இன்று உத்தியோகப்பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக வெள்ளிக்கிழமை நியமித்தார்.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதிவரை ஒத்திவைத்தார். சபாநாயகருடன் கலந்தாலோசிக்காது இவ்வாறு நாடாளுமன்றம் திடீரென ஒத்திவைக்கப்பட்டமை பலர் மத்தியிலும் விமர்சனங்களை தோற்றுவித்தமை குறிப்பிடத்தக்கது.
Read more »

நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு - விஜயதாஸ ராஜபக்‌ஷ


புதிய அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடையுமாயின் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டிருப்பதாக கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் நேற்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.


நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி நான்கரை ஆண்டுகள் முடியும் வரை காத்துக் கொண்டிருக்க தேவையில்லை என தெரிவித்த விஜயதாஸ ராஜபக்‌ஷ அதற்கு முன்னரே அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் அரசுப் பணிகளை நடத்திச் செல்வதற்கு தேவையான நிதியை நாடாளுமன்ற வாக்கெடுப்பினூடாக பெற்றுக் கொள்வதே புதிய அரசாங்கத்தின் முக்கியமான இலக்கு என விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
Read more »

சூரியனையே நெருங்கிச் சென்று ஆய்வு நடத்திய விண்கலம்….!!நாஸாவின் மகத்தான சாதனை….!!

நாசா உருவாக்கியுள்ள பார்க்கர் சேலார் விண்கலம் சூரியனை நெருங்கிச் சென்று சாதனை புரிந்துள்ளது.அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா சூரியனை ஆய்வு செய்வதற்காக பார்க்கர் சேலார் என்ற விண்கலத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தியது.அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கேனவரல் என்ற ராக்கெட் ஏவுதளத்திலிருந்து இந்த பார்க்கர் சேலார் விண்கலம் சூரியனுக்கு ஏவப்பட்டது.சுமார் 612 கிலோ எடையும், ஒன்பது அடி 10 இன்ச் நீளமும் உடைய பார்க்கர் சேலார் விண்கலம் சூரியனின் மேற்பரப்பு வரை சென்று சூரியனை ஆய்வு செய்து இதுவரை தெரியாத பல்வேறு தகவல்கள் வழங்கும்.


இதற்காக 1,400 டிகிரி செல்சியஸ் வரையான வெப்பத்தைத் தாங்கும் வகையில் கார்பனால் உருவாக்கப்பட்ட வெளித்தகடு பொருத்தப்பட்டுள்ளது.வெப்பச் சலனம், வெப்பக் கடத்தல், வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றால் பாதிக்கப்படாதவளவுக்கு பார்கர் விண்கலம் பாதுகாப்பாக அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த- 1976 ஆம் ஆண்டு ஜெர்மனி-அமெரிக்க கூட்டணியில் ஏவப்பட்ட ஹூலியோஸ்- 2 என்ற விண்கலம் 26.6 மைல் தூரத்துக்குச் சூரியனை நெருங்கிச் சென்றது.இந்நிலையில், தற்போது பார்க்கர் சேலார் விண்கலம் 26.6 மைல் தூரத்தைக் கடந்து ஹூலியோஸ்- 2 விண்கலத்தின் சாதனையை முறியடித்துள்ளது.இன்னும் ஏழு நாட்களில் 15 மில்லியன் மைல் தொலைவில் சூரியனை நெருங்கி விடும். பின்னர் 3.8 மில்லியன் மைல் தொலைவில் சூரியனின் மேற்பரப்புக்கு மேல் நிலைநிறுத்தப்பட்டுச் சூரியனை 24 மணி நேரமும் கண்காணித்துத் தகவல்களை வழங்கும்.

பூமி உட்பட அனைத்துக் கோள்களுக்கும் ஆதாரமாக சூரியன் விளங்கும் நிலையில் மனித அறிவின் ஆற்றலால் சூரியனையே நெருங்கிச் சென்று ஆய்வு செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட சேலார் பார்கர் வரலாற்றுச் சாதனையாகவே பார்க்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Read more »

வெலிகம அறபா தேசிய பாடசாலையில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு (படங்கள் இணைப்பு)

இன்று அறபா தேசிய பாடசாலையில் மாணவர்களுக்காக இடம்பெற்ற   தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு பெஷன் பாக் இன் அனுசரணையில்
வபா மண்டபத்தில் இடம்பற்றது.

இஸ்மாயீல் எ அஸீஸ் வளவாளராக கலந்துகொண்டார்.













Read more »

இலங்கையில் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த விரைவில் மாகாண சபைத் தேர்தல்….ஜனாதிபதி மைத்திரி

புதிய அரசாங்கத்தின் கீழ் ஜனநாயகத்தை பலப்படுத்தும் நடவடிக்கையாக வெகுவிரைவில் மாகாண சபை தேர்தலை நடத்தவிருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.இன்று (29) முற்பகல் திஸ்ஸமஹாராம, சந்தகிரிகொட வயல்வெளியில் இடம்பெற்ற தேசிய ஏர்பூட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், அரசியல் தலைமைத்துவமும் வழிகாட்டலுமின்றி இன்று ஆறு மாகாண சபைகளின் உத்தியோகத்தர்கள் சிரமத்திற்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றனர்.


சுற்றுநிரூபங்கள் காரணமாக அதிகாரிகளின் சேவைகள் வரையறுக்கப்படுகின்றமையினால் சிறந்த மக்கள்நேய சேவைகளை வழங்குவதற்கு அரசியல் தலைமைத்துவம் அவசியமாகும் எனத் தெரிவித்தார்.இதனால் வெகுவிரைவில் மாகாண சபை தேர்தலை நடத்துதல் தொடர்பாக நாளையோ அல்லது நாளை மறுதினமோ தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், வடக்காயினும் தெற்காயினும் நாட்டின் எப்பிரதேசத்திலும் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு கடந்த மூன்றரை வருட காலமாக பொறுப்பு வகித்தவர்களுக்கு இயலாது போயுள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், வடக்கு மக்களுக்காக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டம் அமைச்சரவை கலந்துரையாடலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கை சுமையினை குறைத்து நாட்டில் பொருளாதார சுபீட்சத்தை கட்டியெழுப்பி சிறந்த ஒழுக்கப் பண்புடைய அரச நிர்வாகத்தை பலப்படுத்தும் அதேவேளை, தேசியத்திற்கு மதிப்பளித்து முன்னோக்கிச் செல்ல சகலரும் ஒன்றிணைய வேண்டுமென குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதன்பொருட்டு புதிய அரசாங்கத்துடன் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் நட்புடனும் இணைந்துகொள்ளுமாறு தாம் சகல அரசியல்வாதிகளுக்கும், அரச அதிகாரிகளுக்கும், சர்வமதத் தலைவர்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாக தெரிவித்தார்.

புதிய தொழிநுட்பமும் நவீன அறிவும் எமக்கு தேவையாயினும் தேசியத்தை மதிப்பளிக்கும் எமது கலாசார மற்றும் உணவு முறைகளுக்கு பொருத்தமான விவசாய பொருளாதார செயற்திட்டத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டியது அவசியமாகுமெனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.விவசாயிகளுக்கான விதை நெல் மற்றும் பழக்கன்றுகளை பகிர்ந்தளிக்கும் திட்டங்கள் இதன்போது ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள், சமல் ராஜபக்ஷ,மஹிந்த அமரவீர, ஷான் விஜயலால் டி சில்வா, அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பெருந்தொகையான பிரதேச விவசாயிகளும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

இதனிடையே திஸ்ஸமஹாராம தெபரவெவ ஆதார மருத்துவமனையின் சிறுநீரக சிகிச்சைப் பிரிவு இன்றைய தினம் ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள குருதி சுத்திகரிப்பு பிரிவு, இரசாயனகூடம் ஆகியவற்றையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.மருத்துவமனையின் வைத்திய அதிகாரி மருத்துவ கலாநிதி பிரபாத் ஜயதேவ உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.
Read more »

பிரதமர் மஹிந்த தலைமையிலான புதிய அமைச்சரவையின் விபரம் வெளியானது…..

புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் சிலர் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கின்றன.


பாதுகாப்பு அமைச்சர் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
புத்த சாசனம், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
மாநகர நீர் வழங்கல் அமைச்சர் – தினேஷ் குணவர்தன
வெளிநாட்டு அமைச்சர் – சரத் அமுனுகம
துறைமுகம் மற்றும் கப்பல்துறை – விமல் வீரவன்ச
பணம் திட்டமிடல் அமைச்சர் – பந்துல குணவர்தன
விவசாயம் – மஹிந்த அமரவீர
மீன்பிடி அமைச்சர் – மஹிந்த அமரவீர
போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து – நிமல் சிறிபாலடி சில்வா
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் – ஜென்சன் பெர்னாண்டோ
கல்வி அமைச்சர் – டலஸ் அலகபெரும
ஊடக அமைச்சர் – கெகெலிய ரம்புக்வெல,
வர்த்தக அமைச்சர்- மகிந்த சமரசிங்க
தொழில் அமைச்சர் – மஹிந்தானந்த அளுத்கமகே
உயர் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர் – விஜயதாச ராஜபக்ச
கண்டி நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் – எஸ்.பி. திசாநாயக்க
நாடாளுமன்ற விவகார அமைச்சர் – மஹிந்த சமரசிங்க

இன்னும் பல அமைச்சர்களின் பெயர் வெளிவர உள்ளதுடன், ஆகக் குறைந்தது 30 இற்கு மேற்படாத வகையில் அமைச்சரவையும், 45 இற்கு மேற்படாத வகையில் பிரதி அமைச்சர்களும் உள்ளடங்க வேண்டியது 19 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் விதி.

அதனை பின்பற்றியே இந்த நடைமுறை இருக்கும் என பெயர் குறிப்பிட விரும்பாத அரசியல் முக்கியஸ்தர் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.
Read more »

கொழும்பு அரசியலில் அதிரடித் திருப்பம்…ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக திரும்பிய 126 உறுப்பினர்கள்….!! ஆபத்திலிருந்து தப்பினார் ரணில்….!!

நாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள், விடுதலை முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உறுப்பினர்கள் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.இது தொடர்பான கடிதம் இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதில் கூடிய விரைவில் நாடாளுமன்றத்தை கூட்டி, அரசியலமைப்பிற்கமைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு நாடாளுமன்ற பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரும்பான்மையான உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதால், நாடாளுமன்றத்தை கூட்டும் அதிகாரத்தை சபாநாயகர் பெற்றிருக்கிறார்.இதனையடுத்து அடுத்து வரும் நாட்களில் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் 16ம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை விதித்திருந்தார்.பிரதமராக பதவியேற்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் உறுப்பினர்களை திரட்டுவதற்காக இந்த காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.இந்நிலையில் ஜனாதிபதியின் உத்தரவையும் மீறி, உறுப்பினர்களின் ஆதரவுடன் நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளது.

இதன்போது பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கான பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நாளை சபாநாயகர் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட கடிதம் தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்து நாட்டின் சமாதானம், ஸ்திரத்தன்மை மற்றும் மக்களின் அரசு உரிமையை பாதுகாக்குமாறு, நாட்டின் பிரதமராக தான் அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொள்வதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.
Read more »

மஹிந்தவுடனான சந்திப்பை அம்பலப்படுத்தினார் வடிவேல் சுரேஷ் எம்.பி…. !!

தற்போது புதிய பிரதமராக நியமிக்கபட்ட மஹிந்த ராஜபக்ஷவை நட்புறவின் அடிப்படையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததே தவிர அவருக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கவில்லை என தெரிவித்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ், நான் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகப்போவதுமில்லை என்றும் குறிப்பிட்டார்.அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சற்றுமுன்னர் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,நான் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வெளியேற மாட்டேன் . தற்போது நான் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவே உள்ளேன். மஹிந்தவை சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கவே சென்றிருந்தேன்.ஊடகங்கள் தவறான செய்தி வெளியிட்டால் ஊடகங்கள் மீது வழக்குத் தொடர வேண்டிய நிலையயேற்படும். ஐக்கிய தேசியக் கட்சி என்ன முடிவெடுக்கின்றதோ அதன்படியே செயற்படுவேன்.


மஹிந்தவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது பெருந்தோட்ட மக்களின் 1000 ரூபா அடிப்படை சம்பளம் குறித்து கவனம் செலுத்துமாறு அவரிடம் வலியுறு த்தியுள்ளேன்.அரசியலில் இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படும் போது வாழ்த்து தெரிவிப்பது வழமையான விடயமாகும். இதனை பெரிதுபடுத்த வேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டார்.
Read more »

188 பேருடன் பயணித்து விபத்துக்குள்ளான விமானத்தை தேடும் பணிகள் ஆரம்பித்துள்ளன (UPDATE)

இந்தோனிஷிய கடற்பகுதியில் விபத்துக்குள்ளான லயன் போயிங் 737 விமானத்தில் 188 பேர் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த 188 பேருள் ஒரு சிசு, இரண்டு குழந்தைகள், இரண்டு விமானிகள் மற்றும் ஐந்து விமான ஊழியர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. 



இந்தோனேஷியாவின் ஜகார்தா நகரிலிருந்து பங்கள் பினாங் நகருக்கு பயணித்த விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் பயணத்தை ஆரம்பித்து சில மணித்தியாலங்களில் காணாமல் போயிருந்ததாக இதற்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.
இவ்வாறு காணாமல் போன விமானம் கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பின்னர் அறிவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பகுதியில் தற்போது மீட்பு பணிகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

..........................

இந்தோனேஷியாவின் ஜகார்தா நகரிலிருந்து பங்கள் பினாங் நகருக்கு பயணித்த விமானமொன்று காணாமல் போயுள்ளது.விமானம் பயணத்தை ஆரம்பித்து சில மணித்தியாலங்களில் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன லயன் ஏயார் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 பயணிகள் விமானமொன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இவ்வாறு காணாமல் போன விமானம் கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்படுகின்றது.


Read more »

அலரி மாளிகைக்கான நீர் மற்றும் மின்சார வசதிகள் துண்டிப்பு? என்ன செய்யப் போகிறார் ரணில் ….!!

அலரி மாளிகைக்கான நீர் விநியோகம் மற்றும் மின்சார இணைப்பு என்பன துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினரை அலரி மாளிகையை விட்டு வெளியேற்றும் நோக்கில் இவ்வாறு மின்சாரம் மற்றும் நீர்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரத் தகவல்கள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளன.


எவ்வாறெனினும், இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 10 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
Read more »

புதிய பிரதமராக இன்று கடமைகளை பொறுப்பேற்கிறார் மஹிந்த!! …புதிய அமைச்சரவையும் பதவியேற்பு…..!!

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 22ஆவது பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் அவர் கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளதாக பிரதமரின் செயலாளர் எஸ்.அதரசேகர தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக கடந்த 26ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் இன்றைய தினம் பாதுகாப்பு, நிதி, சட்டம் ஒழுங்கு, வெளிவிவகாரம், பொதுநிர்வாகம், ஊடகம், சுகாதாரம் உள்ளிட்ட அமைச்சுக்களில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பிரதமராக பதிவியேற்கும் மஹிந்த ராஜபக்சவிடம் புத்த சாசனம், சட்டம் மற்றும் ஒழுங்கு உள்ளிட்ட அமைச்சுக்கள் கையளிக்கப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read more »

மஹிந்த பிரதமராக பதவியேற்றமையால் தமிழ் மக்கள் பெரும் பீதியில்….. மாவை சேனாதிராஜா எம்.பி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா குறிப்பிட்டுள்ளார்.யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடும் போது;

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடு தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது.கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டில் ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் நிறைந்த குடும்ப ஆட்சி நடைபெறுவதால் மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டுமென நாட்டு மக்களும் சர்வதேச சமூகமும் விரும்பியிருந்தது.


அதற்கமைய பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்பட்டு அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி உட்பட சிறுபான்மைக் கட்சிகள் பலவும் ஆதரவை வழங்கி வெற்றி பெற வைத்தனர்.இதில், தமிழ் மக்களது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதாவது தீர்மானிக்கும் சக்தியாக தமிழர் தரப்பு அக்காலகட்டத்தில் இருந்தமையால் நல்லாட்சி அரசாங்கத்தினை அமைப்பதற்கு உதவியிருந்தது.

ஆனால், தற்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் மாற்றங்கள் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அதிலும் யாரும் எதிர்பாராத நிகழ்ச்சிகள் பல நடந்திருக்கின்றன. யாரும் எதிர்பார்க்காத சூழலில் யாருடனும் பேசாமல் ஜனாதிபதி தனித்தே இத்தகையதொரு முடிவை எடுத்திருக்கின்றார்.

எங்களைப் பொறுத்தவரையில் யார் பிரதமர் என்பதை விட இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே கோரிக்கையாக இருக்கின்றது’ எனவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Read more »

மஹிந்த தலைமையில் புதிய அமைச்சரவை…!! அமைச்சராக மாறும் ஜனாதிபதி மைத்திரி…!! தலைகீழாக மாறிய கொழும்பு அரசியல் களம்…!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான 30 பேர் கொண்ட அமைச்சரவை நாளை சத்தியபிரமாணம் செய்யவுள்ளது.அமைச்சரவை உறுப்பினர்களின் பெயர்களை இறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளன.30 பேர் அமைச்சரவையை அமைக்க வேண்டுமெனின் நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்றை கொண்டு வர வேண்டும். இதனால், அமைச்சரவை நியமனத்தை இரண்டு நாட்களுக்கு பின்நகர்த்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


கிடைத்துள்ள தகவல்களின்படி, பந்துல குணவர்த்தன நிதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். அவரே 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சராக பதவியேற்கவுள்ளார். சட்ட மா அதிபர் திணைக்களத்தையும் ஜனாதிபதி பொறுப்பேற்கவுள்ளார்.
Read more »

அரசியல் கைதிகளுக்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்…. குறுகிய காலத்தில் காத்திரமான நடவடிக்கை……!! மஹிந்த தரப்பு அதிரடி…..!!

இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச அண்மையில் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில், நாளைய தினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து நீண்ட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இது குறித்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து விசேட ஆவணம் ஒன்று தயார் செய்து சட்ட வல்லுனர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.


இதனையடுத்து அரசியல் கைதிகள் விவகாரம் குறுகிய காலத்தில் திடமான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு, துரித விடுதலை தொடா்பில் நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரவித்துள்ளார்.
Read more »

பிரதமராக பதவியேற்ற மஹிந்த! தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானியா….!!

இலங்கை வந்துள்ள பிரித்தானிய பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் விசேட எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.சமகாலத்தில் இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக, தமது நாட்டு பிரஜைகளின் பாதுகாப்பு தொடர்பில் பிரித்தானியா கரிசனை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்று வரும் திடீர் அரசியல் மாற்றம் காரணமாக அவதானமாக இருக்குமாறும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அல்லது விசேட அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும், இலங்கைக்கு செல்லும் போது குறுகிய கால விசா பெற்றுக்கொள்ளுமாறும் பிரித்தானிய பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.முழுமையான பயண மற்றும் மருத்துவ காப்பீடு பெற்றுக் கொள்ளுமாறு பிரித்தானிய சுற்றுலா பயணிகளிடம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


தற்போது இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடரைப் பார்க்க இலங்கை வந்துள்ள சுற்றுலா பயணிகளுக்காக விசேட வழிகாட்டி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.இலங்கையின் நிலைமை தொடர்பில் தொடர்ந்து ஆராய்ந்து சுற்றுலா பயணிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரித்தானியா விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதுடன், நாட்டில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற தோற்றப்பாடு உருவாக்கியுள்ளது.இந்நிலையில் தமது நாட்டு பிரஜைகளுக்கு பிரித்தானியாவின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
Read more »

ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை.. கொண்டுவர ஐ.தே.க தீர்மானம்..?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தயாராகி வருவதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இது சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் வினவிய போது பதிலளித்த அவர் ‘சில யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. அனைத்துக்கும் முன்னர் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்’ என கூறியுள்ளார்.


ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரும் பட்சத்தில் ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் இணைந்து அதனை வெற்றி பெற செய்யலாம், என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுவதாக அரசியல் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
Read more »

ஆட்சி மாற்றம் யார் போட்ட திட்டம்: மைத்திரியால் மிரட்டப்பட்ட மஹிந்த: நடந்தது என்ன?


நேற்று மாலை கொழும்பில் ஜனநாயகத்தின் பெயரில் அதிரடியாக அரங்கேறிய அரசியல் சதி எவ்வாறு திட்டமிடப்பட்டது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சதித்திட்டத்தை கனகச்சிதமாக அதனை அரங்கேற்றி முடிக்கும் வரைஅது பற்றிய எவ்வித தகவல்களையும் கசியவிடாமல் ஒப்பேற்றியிருக்கிறது ஜனாதிபதி தரப்பு.


நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி நிதியத்திற்கான கூட்டம் நடைபெற்றது.

எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அந்த நிதியத்தின் உறுப்பினரான சம்பந்தனும் அக்கூட்டத்தில் பங்குபற்றினார்.

அச்சமயம் கூட்டத்திலும் தனித்தும் சம்பந்தனுடன் ஜனாதிபதி மைத்திரிபால உரையாடினார். ஆனால் அச்சமயம் இன்னும் ஓரிரு மணித்தியாலயத்தில் நல்லாட்சி அரசை வீட்டுக்கு அனுப்ப போகிறோம் என்றோ, அதனால் உங்கள் எதிர்க்கட்சி பதவி பறிபோகப்போகிறது என்றோ எந்த சமிக்ஞையும் சம்பந்தனுக்கு காட்டவில்லை மைத்திரி.


நேற்று மாலை 5மணியளவில் நல்லாட்சி அரசில் மிச்சமாக அங்கம் வகிக்கும் 23 சுதந்திரக்கட்சி எம்.பிக்களையும் ஒரு கலந்துரையாடலுக்கு அழைத்தார் மைத்திரி.

ரணிலை தொடர்ந்து பிரதமராக வைத்திருக்க முடியாது என்றார். மாற்று ஒருவரை பிரதமராக நியமிக்க போகிறேன் என்றார். ஆனால் அந்த மாற்று நபர் மஹிந்த ராஜபக்ச என்றோ அல்லது வேறு யாரோ என்றோ குறிப்புத் தனும் காட்டவில்லை.

ஆனால் ஜனாதிபதியின் பேச்சில் அவர் ஐ.தே.கட்சியிலிருந்து வேறு ஒருவரை தான் பிரதமராக நியமிக்கப்போகிறார் என்றே சு.கட்சியினர் எண்ணினர்.

திடீரென ஜனாதிபதியின் உத்தரவில் ஒரு கடிதம் அங்கு கொண்டுவரப்பட்டது. அதில் "நல்லாட்சி அரசுக்கான ஆதரவை சு.கட்சி உள்ளடங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலக்கிக் கொள்வதாக எழுதப்பட்டிருந்தது."

அதில் கையொப்பம் இடுமாறு ஐ.ம.சு.கூட்டமைப்பின் செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர வற்புறுத்தப்பட்டார்.


மஹிந்த ராஜபக்ச தரப்பை முற்றுமுழுதாக எதிர்க்கும் சு.கட்சியின் அமைச்சர்களான மகிந்த அமரவீர, துமிந்த திஸநாயக்க போன்றோர் உடனடியாக நல்லாட்சி அரசில் இருந்து வெளியேறும் திட்டத்திற்கு உடன்பட மறுத்தனர்.

ரணிலை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மஹிந்தவை பிரதமராக்கும் எண்ணத்துடனேயே இந்த காய்நகர்த்தலை மைத்திரி முன்னெடுக்கிறார் என்பது அப்போதும் கூட மகிந்த அமரவீர, துமிந்த திஸ்நாயக்க போன்றோருக்கு தெரிந்திருக்கவில்லை.

மகிந்த அமரவீரவிடம் ஒப்பந்தத்தை வற்புறுத்தி பெற்றதும் அந்த கடிதத்தின் ஒரு பிரதி சபாநாயகருக்கு அனுப்பப்பட்டது. அதன்பின்னர் தான் புதிய பிரதமராக பதவியேற்க மஹிந்த ராஜபக்ச வந்துகொண்டிருக்கிறார் என்ற செய்தி நல்லாட்சி அரசில் மிஞ்சியிருந்த சு.கட்சி எம்.பிக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

தற்போதைய அரசியலமைப்பு ஏற்பாடுகளின்படி அரசியலமைப்பின் 19ஆவது திருத்தப்படி பதவியில் இருக்கும் ஒரு பிரதமரை பதவி விலக்குவது சுலபமான விடயம் அல்ல.


இது தொடர்பான அரசமைப்பு விதிகளின் சிங்கள மொழிபெயர்ப்பில் உள்ள ஒரு மயக்கமான வசனத்தை சாதகமாக பயன்படுத்தி அந்த வாசகத்தின் அர்த்தம் ஜனாதிபதிக்கு இதில் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்பது போன்ற வியாக்கியானத்தை சட்டமா அதிபரிடம் பெற்று அதன் மூலம் இந்த தந்திரோபாய நகர்வை முன்னெடுத்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரி.

இப்படி தன்னை பதவி விலக்கியமைக்கு எதிராக ரணில் நீதிமன்றத்திற்கு போகலாம். ஆனால், எது எப்படி என்றாலும் இதில் இறுதியில் ஆட்சியை தீர்மாணிக்க போவது எம்.பிக்களின் ஆதரவு பற்றிய அட்சரகணித கணக்குத்தான்.

ரவி கருணாயக்க தலைமையிலான ஒரு குழு ஐ.தே.க பக்கத்திலிருந்து மஹிந்த பக்கம் பாய்ந்துவிட்டது என்று நேற்றிரவு கொழும்பு அரசியலில் பேசப்பட்டது.

ஹக்கீமின் முஸ்லீம் காங்கிரஸ், ரிஷாத்தின் கட்சி, மனோகணேசன் திகாம்பரம் ராதாகிருஷ்ணன் ஆகிய முத்தரப்பின் ஆறு எம்.பிக்கள் அணி என்பவை எல்லாம் பேரம் பேசி, அரசியல் குதிரையோட்டங்கள் நடாத்தி இனி எந்த முடிவுக்கு வரப்போகின்றன என்பதில் தான் விடயங்கள் தங்கியிருக்கின்றன.

இதே சமயம் சு.கட்சியில் இருந்தபடி மஹிந்த ராஜபக்சவை கடுமையாக எதிர்த்து வந்த மகிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க போன்றோரும் இப்போது மதில் மேல் பூனையாக இருப்பார்கள்.


அவர்கள் என்ன முடிவு செய்வார் என்பதும் தெரியாது. இவை எல்லாம் சேர்ந்தே பிரதமர் மஹிந்த தலைமையிலான அரசின் ஆயுளை தீர்மானிக்கும்.

இதற்கிடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி ஆகியவற்றின் ஆதரவுடன் தாம் நாடாளுமன்றத்தின் அறுதிப்பெரும்பான்மையை 113 எம்.பிக்களின் ஆதரவை பெறமுடியும் என்றால் அதன் அடிப்படையில் ஜனாதிபதியின் இந்த செயற்பாடு அரசமைப்பு விரோத நடவடிக்கை எனத் தெரிவித்து அதற்கு எதிராக ஜனாதிபதி மேல் குற்றப் பிரேரணை ஒன்றை கொண்டுவந்து அதனை தங்கள் கட்சியை சேர்ந்த சபாநாயகரிடம் ஒப்படைத்து, அவரை அதனை ஏற்க வைத்து அதன்மூலம் உடனடியாக நாடாளுமன்றத்தை இடைநிறுத்தும் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு விரைந்து "செக்" வைப்பதற்கும் ஜனாதிபதி மீது தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதற்கும் ஐ.தே.கட்சி திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகின்றன.
Read more »

BREAKING NEWS ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவிப்பு


.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக சபாநாயகருக்கு அறிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர சபாநாயகருக்கு இத்தீர்மானத்தை அறிவித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ளதாகவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
மேலதிகத் தகவல்களை எதிர்பாருங்கள்

Read more »

முஸ்லிம் நாடான பாகிஸ்தானில், சீக்கியர்களுக்கு அதிவிஷேட சிறப்புச் சலுகை




பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இரு சக்கர வாகனங்கள் ஓட்டும்பொழுது சீக்கியர்கள் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.


பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துங்குவாவில் 60 ஆயிரம் சீக்கியர்கள் வசிக்கின்றனர். இதில் பெஷாவர் நகரில் 15 ஆயிரம் சீக்கியர்கள் உள்ளனர். இந்த நிலையில், கைபர் பக்துங்குவா சட்டசபையில் சிறுபான்மை சமூக உறுப்பினர் ஒருவர், மோட்டார் சைக்கிள்கள் ஓட்டும்பொழுது தலைப்பாகை அணிந்த சீக்கியர்கள் ஹெல்மெட் அணிவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரினார்.


இதனை அடுத்து பெஷாவர் நகர போலீசார் இதற்கு அனுமதி அளித்துள்ளனர். அதன்படி, தலைப்பாகை அணிந்த சிறுபான்மை சமூகத்தினர் இரு சக்கர வாகனங்கள் ஓட்டும்பொழுது ஹெல்மெட் அணிய விலக்கு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
Read more »

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான, இனப்படுகொலை தொடருகிறது - ஐ.நா.


மியான்மரில் ராகைன் நகரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக வசித்து வந்தனர். இந்த நிலையில் அந்நாட்டின் ராணுவம் அவர்கள் மீது இனஅழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது என குற்றச்சாட்டு எழுந்தது.


இதுபற்றி வெளியான அறிக்கை ஒன்றில், மியான்மர் அரசு இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ஆனால் செய்தியாளர்கள் மற்றும் ஐ.நா. புலனாய்வு அமைப்பினர் சம்பவம் நடந்த பகுதிக்கோ அல்லது இனஅழிப்பு பற்றி அகதிகளிடம் விசாரணை மேற்கொள்ளவோ தடை விதித்தது.


கடந்த வருடம் ஆகஸ்டில் இருந்து இதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து வங்காளதேச நாட்டிற்கு தப்பி சென்றுள்ளனர் என தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.


இந்த நிலையில், ஐ.நா.வின் உண்மை கண்டறியும் குழு ஒன்று மர்ஜுகி டாருஸ்மன் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த குழு மியான்மரில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.


இதில், பெருமளவிலான கொலைகளை கடந்து, மக்களை சமூகத்தில் இருந்து ஒழித்தல், குழந்தை பிறப்பினை தடுத்தல் மற்றும் முகாம்களில் இருந்து எண்ணற்றோரை வெளியேற்றுதல் உள்ளிட்ட மோதல்களும் நடந்துள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இதுபற்றிய செய்தியாளர் சந்திப்பில், இனப்படுகொலை தொடருகிறது என குழு தலைவர் மர்ஜுகி தெரிவித்துள்ளார். அவர், வங்காளதேசத்தில் உள்ள ரோஹிங்யாக்கள் மியான்மருக்கு திரும்புவதற்கு ஏற்ற பாதுகாப்புமிக்க, கண்ணியம் நிறைந்த சூழ்நிலைகள் இல்லை என எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் இதற்காக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியினாலும் மரணத்திற்கான ஆபத்து உயரும் என தெரிவித்துள்ளார்.


இதுபற்றிய 444 பக்கங்கள் கொண்ட அறிக்கை கடந்த மாதம் வெளியானது. இந்த விவகாரம் தி ஹேக்கில் உள்ள சர்வதேச குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என ஐ.நா. அமைப்புக்கு அறிக்கையின் வழியே தெரிவிக்கப்பட்டது.
Read more »

முஸ்லிம் என்று சொல்லு, மனிதாபிமானத்தில் முந்து - உலகை அதிரவைத்துள்ள பிரிட்டன் நீதிபதியின் தீர்ப்பு

சோமாலிய அகதியான ஒரு பெண் தனது குடும்பத்தினரின் பாஸ்போர்ட்களை பயன்படுத்தி இரண்டு அகதிகளை பிரித்தானியாவுக்கு கொண்டு வந்தபோது பிடிபட்டார்.


ஆனால் மனிதக் கடத்தல் செய்த குற்றத்திற்காக அவரை சிறைக்கு அனுப்புவதற்கு பதில், அவரை புகழ்ந்து பேசியுள்ளார் நீதிபதி.


சோமாலியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு அகதியாக வந்து பிரித்தானியக் குடியுரிமை பெற்றவர் Hana Abdi Qahtan (46). பஹ்ரைனுக்கு சென்ற அவர், தனது தாய் மற்றும் மகனின் பாஸ்போர்ட்களைப் பயன்படுத்தி இரண்டு சோமாலிய அகதிகளை பிரித்தானியாவுக்குள் கொண்டு வந்தார்.


புலம்பெயர்தல் விதிகளை மீறுவதற்கு உதவியதற்காக அவருக்கு ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, அதிக பட்சமாக 14 ஆண்டுகள் வரை அவருக்கு தண்டனை வழங்கப்படலாம்.


ஆனால் தீர்ப்பு வழங்கிய நீதிபதியாகிய Sarah Paneth, Hanaவிடம், நீங்கள் உங்கள் குடும்பத்தினரின் பாஸ்போர்டுகளை பயன்படுத்தி உங்கள் உறவினரான ஒரு பெண்ணையும் அவரது மகனையும் பிரித்தானியாவிற்குள் கொண்டு வந்திருக்கிறீர்கள்.


அது மிகப்பெரிய குற்றம், அதற்கு மிக நீண்ட கால சிறைத்தண்டனை வழங்கப்படும். துரதிர்ஷ்டவசமாக உங்கள் மகளே ஏமனில் கொல்லப்பட்டிருக்கிறார், அந்த நேரத்தில் நீங்களே புகலிடம் தேடும் ஒரு நிலைக்கு ஆளாகியிருக்கிறீர்கள்.




அதனால் உங்களைப் போலவே புகலிடம் தேடும் அந்த பையனுக்கு நீங்கள் உதவியிருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு பொருளாதார ரீதியில் எந்த வித லாபமும் இல்லை, அந்தப் பெண் உங்கள் நெருங்கிய உறவினரும் இல்லை.


இதில் என்னைத் தொட்ட விடயம் என்னவென்றால், ஒரு அகதியாக வந்த நீங்கள் முயற்சி செய்து ஆங்கிலமும், சுகாதாரமும் சமூக நலனும் கற்றிருக்கிறீர்கள்.


உங்கள் வீட்டிலேயே பிள்ளைகள் இருக்கும்போது நீங்கள் தேவையிலிருக்கும் மற்றவர்களுக்கு உதவியிருக்கிறீர்கள்.


உங்களால் கவனிக்கப்படுபவர்கள், நீங்கள் அதிக சிரத்தை எடுத்து அவர்களை கவனித்துக் கொள்வதாகக் கூறியிருக்கிறார்கள்.


உங்களுக்கே உடல் நலப் பிரச்சினைகள் இருந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் நீங்கள் மற்றவர்களுக்கு உதவுகிறீர்கள்.


உங்களை வெறும் ஒரு மனிதக் கடத்தல் செய்பவர் என்று என்னால் கூறிவிட முடியாது.


அதனால் இதுதான் என்னுடைய தீர்ப்பு, இதை ஒரு அசாதாரண வழக்காக கருதி உங்களை சிறையில் அடைக்காமல், உங்களுக்கு எளிதான சமூக சேவையை தண்டனையாக வழங்குகிறேன் என்றார்.


புலம்பெயர்தல் விதிகளை மீறிய ஒரு அகதியை சிறைக்கு அனுப்பாமல் அவரது மனிதாபிமானத்தைக் கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது பலரையும் நெகிழச் செய்துள்ளது.
Read more »

தாயை இழந்த ஜீவன்களுக்கு தாயாக மாறிய நன்றியுள்ள மிருகம்…!! இலங்கையில் நடக்கும் விசித்திரம்..!!

தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் நாயின் செயற்பாடு தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.பாணந்துறை கடற்கரையில் பூனைக் குட்டிகளை பாதுகாக்கும் நாயின் செயற்பாடு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த நாய் அண்மையில் குட்டிகளை போட்டுள்ளது. எனினும், அதன் குட்டிகள் அனைத்து உயிரிழந்துள்ளன.இந்நிலையில், தாயினை இழந்த பூனைக் குட்டிகளுக்கு தாயப் பாசத்தை வெளிப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


மனிதர்களை மிஞ்சியதாக நாயின் தாய்ப்பாசம் அமைந்துள்ள நிலையில்இ கடற்கரைக்கு வருவோரின் மனங்களையும் நெகிழச் செய்துள்ளது.
Read more »

வயிற்று வலியால் அவதிப்பட்ட 16 வயது மாணவி ஐந்து மாதக் கர்ப்பிணியாம்… அதிர்ச்சியில் மருத்துவர்கள்….!!

செவனகல பிரதேசத்தில் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
செவனகல – களுதியஹார பிரதேசத்தை சேர்ந்த 16 வயதான பாடசாலை மாணவியே கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மாணவி 5 மாத கர்ப்பிணி என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து மருத்துவர்கள் மாணவி தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.பொலிஸார், மாணவியின் தாயாரிடம் இது சம்பந்தமாக விசாரணை நடத்தியுள்ளனர். எனினும் இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என மாணவி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

விசாரணைகளில் தெரியவந்த விடயங்களுக்கு அமைய மாணவியின் சிறிய தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாணவியின் கர்ப்பத்திற்கு மற்றுமொரு நபரும் காரணம் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.செவனகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Read more »

கடும் மழை, காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல் யாழில் சரிந்து வீழ்ந்த 200 வருடங்கள் பழமைவாய்ந்த மரம்….!!


.

யாழ்ப்பாணத்தில் நேற்று பெய்த கடும் மழை மற்றும் புயல் காற்று காரணமாக 200 வருடங்கள் பழமையான பாரிய மலை வேம்பு மரம் ஒன்று 


சரிந்து விழுந்துள்ளது யாழ். பழைய பூங்கா வீதியில் உள்ள வடமாகாண மின்சாரசபை காரியாலயம் முன்பாக நின்றிருந்த மரமே சரிந்து விழுந்துள்ளது.இதனால், யாழ். மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதிகள் ஊடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது.


இதையடுத்து, யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும், சுகாதார ஊழியர்களும் இணைந்து குறித்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read more »

கட்டுநாயக்கா வந்த விமானம், திருப்பி அனுப்பி வைப்பு


கட்டுநாயக்க பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.


UL 405 என்ற விமானமே மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாங்கொக்கில் இருந்து வந்த விமானமே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.


குறித்த விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாலை 5.10 மணிக்கு தரையிற்றக்க திட்டமிட்டிருந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக மாலை 5.50 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.


135 பயணிகள் மற்றும் 9 ஊழியர்களுடன் பயணிக்கும் குறித்த விமானம் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.


பின்னர் கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி புறப்பட்ட விமானம் சீரற்ற காலநிலை காரணமாக மீண்டும் மத்தள விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டுள்ளது.
Read more »

பெண்ணின் சேலையையும், பிக்குவின் காவியையும் அவிழ்க்கிறார்கள் - மகிந்த ஆவேசம்


அங்குகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்வையிட சென்ற தலைமை பௌத்த பிக்கு ஒருவரின் காவி உடை அவிழ்க்கப்பட்டதாகவும், அதேபோன்று பெண்ணொருவரின் சேலையும் அவிழ்க்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


தங்காலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


மேலும் தெரிவிக்கையில், அங்குகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்கு ஒருவரை பார்க்க சென்ற தலைமை பௌத்த பிக்கு ஒருவரின் காவி உடை அவிழ்க்கப்பட்டுள்ளது.


வயதான பெண்மணி ஒருவரின் சேலையையும் கழற்றப்பட்டுள்ளது. இப்படியான நிலைமை ஏற்பட்டுள்ளமை குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.


இந்த விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் அமைதியாக இருந்து விட முடியாது. போர் நடந்த காலத்தில் கூட இப்படியான சம்பவங்கள் நடக்கவில்லை என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Read more »