100 ரூபாவுக்காக, ஒரு கொலை


பதுளை மாவட்டம் ஹல்துமுல்ல - முறுதகின்ன- நிகபொத்த பிரதேசத்தில் 100 ரூபாய் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நிகபொத்த பிரதேசத்தில் மரண வீட்டில் நேற்று இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது 38 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த நபர் மரண வீட்டில் சூதாட்டம் விளையாடிக் கொண்டிருக்கும்போது மற்றுமொரு நபருடன் ஏற்பட்ட மோதலால் அந்த நபரை தடியால் அடித்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


சம்பம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார் குறிப்பிட்டனர்.


உயிரிழ்ந்தவர் ஹம்பாந்தோட்டை சம்கிபுரத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.