188 பேருடன் பயணித்து விபத்துக்குள்ளான விமானத்தை தேடும் பணிகள் ஆரம்பித்துள்ளன (UPDATE)

இந்தோனிஷிய கடற்பகுதியில் விபத்துக்குள்ளான லயன் போயிங் 737 விமானத்தில் 188 பேர் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த 188 பேருள் ஒரு சிசு, இரண்டு குழந்தைகள், இரண்டு விமானிகள் மற்றும் ஐந்து விமான ஊழியர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவின் ஜகார்தா நகரிலிருந்து பங்கள் பினாங் நகருக்கு பயணித்த விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் பயணத்தை ஆரம்பித்து சில மணித்தியாலங்களில் காணாமல் போயிருந்ததாக இதற்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.
இவ்வாறு காணாமல் போன விமானம் கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பின்னர் அறிவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பகுதியில் தற்போது மீட்பு பணிகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

..........................

இந்தோனேஷியாவின் ஜகார்தா நகரிலிருந்து பங்கள் பினாங் நகருக்கு பயணித்த விமானமொன்று காணாமல் போயுள்ளது.விமானம் பயணத்தை ஆரம்பித்து சில மணித்தியாலங்களில் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன லயன் ஏயார் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 பயணிகள் விமானமொன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இவ்வாறு காணாமல் போன விமானம் கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்படுகின்றது.