இலங்கையில் செய்தி வாசிக்கும் 2 பெண்களுக்கு நடந்த கொடுமை


இலங்கையின் பிரபல தனியார் தொலைகாட்சியில் செய்தி வாசிக்கும் இரு பெண்கள், செய்தி வாசிக்கும் போது மயங்கி விழுந்துள்ளனர்,


முழுமையாக மூடப்பட்டுள்ள அறைக்குள் காற்று சீரமைப்பு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


இவ்வாறான நெருக்கடி நிலையில் செய்தி வாசிக்க முடியாதென குறித்த செய்தி வாசிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தொலைக்காட்சி நிர்வாகம் அவர்களை வலுக்கட்டாயமாக செய்தி வாசிக்க வைத்துள்ளது.


செய்தி வாசிக்கும் அறையில் மேலும் ஒருவர் மயங்கி விழுந்த போதும், அதனை கண்டுகொள்ளாமல் செய்தி வாசிக்குமாறு நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.