இந்தியாவின் அபார பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் சுருண்டது மேற்கிந்திய தீவுகள்…..!! இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டங்களினால் படுதோல்வி!!

இந்தியா அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை தாக்குப்பிடிக்க முடியாத மேற்கிந்திய தீவுகள் அணி 2 ஆவது இன்னிங்சில் 196 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதனால் முதலாவது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.முதலில் விளையாடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 649 ஓட்டங்களை குவித்து இடைநிறுத்தியது. இதில் புதுமுக வீரர் பிரித்விஷா 134 , விராட் கோஹ்லி 139, ஜடேஜா 100 ஓட்டங்களை பெற்றனர்.


மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், தேவேந்திர பிஷூ 4 விக்கெட்டும், லீவிஸ் 2 விக்கெட்டும், கேப்ரியல், பிராத்வெயிட், ரோஸ்டன் சேஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அந்தவகையில் நேற்றைய 2 ஆவது நாள் ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 94 ஓட்டங்களை பெற்றது.

இன்று 3 ஆவது நாள் ஆட்டத்தில் 555 ஓட்டங்கள் பின்தங்கிய நிலை, கைவசம் 4 விக்கெட் என்ற நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடியது. இருப்பினும் 181 ஓட்டங்களுக்கு அனைத்து விகாட்களையும் இழந்தது.இந்திய அணி சார்பில் அஷ்வின் 4, மொகமட் ஷமி 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

இந்நிலையில் 468 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் ‘பாலோஒன்’ 2 ஆவது இன்னிங்சில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 196 ஒட்டங்களை மட்டுமே பெற்று 272 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இந்திய அணி சார்பில் குலதீப் யாதவ் 5 விக்கெட்களையம், ஜடேஜா 3, அஷ்வின் 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.