ஹம்பாந்தோட்டை - லுனுகம்வெஹெர பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 50 பேர் #காயமடைந்துள்ளனர்


இந்த விபத்து இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

மாத்தறையிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றும், தெஹிஅத்தகண்டிவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் லுனுகம்வெஹெர, தெம்பரவெவ மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுகம்வெஹெர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.