Monday, October 8, 2018

ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்

இலங்கை ஒன்லைன்விசா வசதிகளை விரிவுபடுத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்க, ஒன்லைன் விசா வசதிகள் விரிவுபடுத்தப்படவுள்ளன. இதற்காக நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளதாக திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒன்லைன் விசா விதிமுறைகளை தளர்த்த திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசா கட்டுப்பாட்டாளர் சமிந்த ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.ஏற்கனவே ஒன்லைன் விண்ணப்பங்கள் பெற கூடிய வகையில் உள்ளன. ஆனால் ஸ்பான்சர்ஷிப் போன்ற நிலைமைகள் தளர்த்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இலங்கை வரும் திகதியில் இருந்து 30 நாட்களுக்கு விசா வழங்கப்பட்டது. எனினும், இனி வரும் காலங்களில் 6 மாதங்கள் வரை விசா காலம் நீடிக்கப்படவுள்ளது.மின்னணு சுற்றுலா அங்கீகாரத்திற்கு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துடன் இணைந்த விசா வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எந்த தடையும் இன்றி ஒன்லைன் விசா வசதிகளை விரிவுபடுத்துவதற்கான வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.சீனா, இந்தியா, பிரான்ஸ், ஜேர்மன், ஐக்கிய ராஜ்ஜியம், மற்றும் மத்திய கிழக்கு போன்ற நாடுகளின் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் நோக்கில் விசா விதிகளை தளர்ப்பதற்கு அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.