இலங்கையில் நாகமாணிக்கத்தைக் கொள்ளையிட்டவருக்கு சில நாட்களின்பின் நேர்ந்த கதி!

கோடிக்கணக்கான ரூபா பெறுமதியுடைய நாகமாணிக்கத்தைக் கொள்ளையிடதாகச் சந்தேகிக்கப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிஸாரால்கைதுசெய்யப்பட்டுள்ளார்.
10கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான நாகமாணிக்கமே குறித்த பொலிஸ் அதிகாரியால் கொள்ளையிடப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பொலிஸ் அதிகாரி ஒரு பொலிஸ் பரிசோதகர் என கூறப்பட்டுள்ளது.

மாதம்பை பொலிஸ் நிலையத்தின் விசேட பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொட்டாவ பிரதேசத்தில் வைத்து குறித்த பொலிஸ் பரிசோதகர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜுன் மாதம் மாதம்பை – மஹகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்த நாகமாணிக்கத்தை சில நபர்களுடன் இணைந்து குறித்த நபர் கொள்ளையடித்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
WhatsApp Facebook Messenger 4Shares