ரங்கன ஐயே, விடைபெறுகிறார்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெரத் அறிவித்துள்ளார்.


அதன்படி இங்கிலாந்து அணிக்கு எதிராக வரும் நவம்பர் மாதம் 6-ஆம் திகதி நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஹெரத் அதன்பின்னர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்.


குறித்த போட்டி கலே மைதானத்தில் நடக்கிறது.


ஹெரத் கடந்த 1999-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.


அவர் விளையாடிய முதல் போட்டியும் கலே மைதானத்தில் நடைபெற்ற நிலையில் கடைசி போட்டியும் அங்கு தான் நடைபெறவுள்ளது.


40 வயதாகும் ஹெராத் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 430 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.


இலங்கை அணி சார்பில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமை ஹெரத் வசம் உள்ளது.


இப்பட்டியலில் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார்.


ஹெரத்தின் ஓய்வு முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.