இலங்கைக்கு அடித்த மகாயோகம்…..!! தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..!! பறித்தெடுக்க போட்டிபோடும் சர்வதேசம்….!!மன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

20 வருடங்களுக்கு 300 மெகாவோட் கணக்கில் மின்சாரம் உற்பத்தி செய்ய கூடிய இயற்கை எரிவாயு வைப்பகம் ஒன்று மன்னாரில் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இந்த வைப்பகம் 350 கன அடியை கொண்டுள்ளதாகவும், அதனை அபிவிருத்தி செய்வதற்காக திறந்த விலை மனு கோரல் ஒன்று எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


எண்ணெய் மற்றும் எரிவாயு வைப்பங்களை ஆய்வு செய்யும் ஸ்லம்புஜா என்ற சர்வதேச நிறுவனத்தினால் மன்னார் கடல் பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் ZM 2Z என பெயரிடப்பட்ட பகுதியில் இந்த இயற்கை எரிவாயு வைப்பகம் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னார் கடல் பகுதியில் 1500 மீற்றர் ஆழ் கடலில் இருந்து மேலும் 2000 மீற்றர் தூர ஆழத்தில் இந்த வைப்பகம் அமைந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த வைப்பகத்தை பெற்றுக் கொள்வதற்காக 750 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்ய வேண்டும். அதற்காக சர்வதேச சந்தையில் விலை மனு கோரப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவை பெற்றுக்கொள்ள பல உலக நாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.