மது போதையில் வாகனம் ஓட்டிய பெண் மருத்துவர்: பொலிஸ் பரிசோதகர் பலி

கொழும்பு - பொரல்லஸ்கமுவ பிரதேசத்தில் நடந்த வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.


கொல்லப்பட்ட பொலிஸ் பரிசோதகர் கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.


இவர்கள் பயணித்த வாகனத்துடன் பெண் மருத்துவர் ஒருவர் செலுத்தி வந்த கார் மோதியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மருத்துவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பெண் மருத்துவர் மது அருந்தியிருந்தமை பொலிஸார் மேற்கொண்ட சுவாச பரிசோதனையில் தெரியவந்துள்ளது.