Saturday, October 6, 2018

கைத்தொலைபேசிகள் குறித்து கடுமையான எச்சரிக்கை! உடனடியாக செய்யுமாறு அறிவுறுத்தல்

இரவு உறங்கும் அறையில் கையடக்கத் தொலைபேசிகளை அணைத்துவிட்டு அல்லது தூர வைத்துவிட்டு உறக்கத்திற்குச் செல்லுமாறு சுகாதாரப் பிரிவு பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளது.

கையடக்கத் தொலைபேசிகளை தலைக்கு அருகில் வைத்துவிட்டு உறங்கும் பழக்கம் இலங்கை மக்களிடையே அதிகரிப்பதாகவும் இதனால் மூளையின் நரம்பு மண்டலம் மிக மோசமான பாதிப்பினைச் சந்திக்கும் அபாயத்தில் இருப்பதாகவும் சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

கையடக்கத் தொலைபேசியிலிருந்து தொடர்சியாக வெளிப்படும் மின்காந்த அலைகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தி புற்று நோய்களை ஏற்படுத்துவதாக விசேட மருத்துவ நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

நீண்ட நேரம் பேசும்போதும் ஹெட் செட் பாவித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது