சீனாவும் செயற்கைக் கோளை ஏவியது...


சீனா தனது செயற்கைக்கோள்கள் இரண்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

இன்று உள்ளூர் நேரப்படி முற்பகல் 10.43 அளவில் இந்த செயற்கைக் கோள்கள் பொருத்தபட்ட ஏவுகணை ஏவப்பட்டன.


இந்த செயற்கைக் கோள்கள் மூலம் மின் காந்தம் தொடர்பான சுற்றுச்சூழல் ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சீன அரச தரப்பு தெரிவிக்கின்றது.


வட-மேற்கு சீனாவில் அமைந்துள்ள ஜிகுவான் செயற்கைக்கோள் செலுத்தும் தளத்திலிருந்து, இந்த செயற்கைக் கோள்கள் செலுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.