குற்றங்களைக் கட்டுப்படுத்த யாழ் பிரதான வீதிகளில் மிக விரைவில் சி.சி.ரி.வி. கமரா!!


.


நல்­லூர் பிர­தேச சபை­யின் பிர­தான மூன்று வீதி­க­ளில் மறை­காணி (சிசி­ரிவி) பொருத்­தித் தரு­மாறு கோப்­பாய் பொலி­ஸார் விடுத்த வேண்­டு­கோ­ளுக்கு அமை­வாக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக நல்­லூர் பிர­தேச சபை­
யின் தவி­சா­ளர் த.தியா­க­மூர்த்தி தெரிவித்­தார்  நல்­லூர் பிர­தேச சபை உறுப்­பி­னர்­கள், அதி­கா­ரி­கள் மற்­றும் கோப்­பாய் பொலி­ஸா­ருக்­கும் இடை­யி­லான கலந்­து­ரை­யா­டல் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது.


இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில், நல்­லூர் பிர­தேச சபை­யின் எல்­லைக்கு உட்­பட்ட மூன்று இடங்­க­ளில் மறை­காணி (சிசி­ரிவி) பொருத்­தப்­பட வேண்­டுமென பொலி­ஸார் கூறி­யுள்­ள­னர்.திரு­நெல்­வே­லிச் சந்தி, கொக்­கு­வில் தொட­ருந்து நிலை­யப் பகுதி, இரா­ம­சாமி பெரி­யார் சந்தி ஆகிய இடங்­க­ளில் உட­ன­டி­யாக மறை­காணி பொருத்­தப்­பட வேண்­டும் என்று பொலி­ஸார் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

இந்­தப் பகு­தி­க­ளில் வாகன நெரி­சல் ஏற்­ப­டு­கின்­றது. அத்­து­டன் இந்­தப் பகு­தி­க­ளில் இடம்­பெ­றும் சமூக விரோ­தச் செயல்­கள், குற்­றங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு உத­வி­யாக இருக்­கும் என்று பொலி­ஸார் தெரி­வித்­துள்­ள­னர்.

பொலி­ஸா­ரின் கோரிக்­கையை நல்­லூர் பிர­தேச சபை ஏற்­றுக் கொண்­டுள்­ளது. சபை­யின் எல்­லைக்கு உட்­பட்ட பகு­தி­க­ளில் சட்­டம் ஒழுங்­கைப் பேணு­வ­தற்கு பொலி­ஸா­ருக்கு பிர­தேச சபை உதவி செய்­யும் எனவும் தவி­சா­ளர் மேலும் குறிப்­பிட்­டார்.