நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு - விஜயதாஸ ராஜபக்‌ஷ


புதிய அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடையுமாயின் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டிருப்பதாக கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் நேற்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.


நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி நான்கரை ஆண்டுகள் முடியும் வரை காத்துக் கொண்டிருக்க தேவையில்லை என தெரிவித்த விஜயதாஸ ராஜபக்‌ஷ அதற்கு முன்னரே அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் அரசுப் பணிகளை நடத்திச் செல்வதற்கு தேவையான நிதியை நாடாளுமன்ற வாக்கெடுப்பினூடாக பெற்றுக் கொள்வதே புதிய அரசாங்கத்தின் முக்கியமான இலக்கு என விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.