ஆற்றில் விழுந்து சிறுமி நசீஹா உயிரிழந்த சோகம்.


கிண்ணியா, கட்டையாறு ஆற்றில் ஏழு வயது நிரம்பிய சிறுமி ஒருவர் வீழ்ந்த பரிதாபகரமாக உயிரிழந்த
சம்பவமொன்று நேற்றுமுன்தினம் மாலை இடம் பெற்றுள்ளது.

கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 2 இல் கல்வி கற்கும் பாத்திமா நஸீஹா என்ற மாணவியே உயிரிழந்தவராவார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

கிண்ணியா கட்டையாறு ஆற்றின் மத்தியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் தனது நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்த போது, ஆற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப் படுகிறது..

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.