மஹிந்தவுடனான சந்திப்பை அம்பலப்படுத்தினார் வடிவேல் சுரேஷ் எம்.பி…. !!

தற்போது புதிய பிரதமராக நியமிக்கபட்ட மஹிந்த ராஜபக்ஷவை நட்புறவின் அடிப்படையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததே தவிர அவருக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கவில்லை என தெரிவித்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ், நான் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகப்போவதுமில்லை என்றும் குறிப்பிட்டார்.அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சற்றுமுன்னர் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,நான் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வெளியேற மாட்டேன் . தற்போது நான் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவே உள்ளேன். மஹிந்தவை சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கவே சென்றிருந்தேன்.ஊடகங்கள் தவறான செய்தி வெளியிட்டால் ஊடகங்கள் மீது வழக்குத் தொடர வேண்டிய நிலையயேற்படும். ஐக்கிய தேசியக் கட்சி என்ன முடிவெடுக்கின்றதோ அதன்படியே செயற்படுவேன்.


மஹிந்தவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது பெருந்தோட்ட மக்களின் 1000 ரூபா அடிப்படை சம்பளம் குறித்து கவனம் செலுத்துமாறு அவரிடம் வலியுறு த்தியுள்ளேன்.அரசியலில் இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படும் போது வாழ்த்து தெரிவிப்பது வழமையான விடயமாகும். இதனை பெரிதுபடுத்த வேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டார்.