கெவனோவிடம் மன்னிப்புக் கோரினார் ட்ரம்ப் - WeligamaNews

Latest

Tuesday, October 9, 2018

கெவனோவிடம் மன்னிப்புக் கோரினார் ட்ரம்ப்


அமெரிக்காவின் உயர் நீதிமன்ற நீதியரசராக பதவியேற்றுள்ள பிரெட் கெவனோவிடம் அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மன்னிப்பு கோரியுள்ளார்.


கவனோ மீது சுமத்தப்பட்ட பாலியல் துஸ்பிரயோக முறைப்பாடுகளை “பொய் பிரசாரம்” என அவர் விவரித்துள்ளார்.


அதற்காக கவனோவிடம் அமெரிக்காவின் சார்பில் டொனால்ட் ட்ரம்ப் மன்னிப்பு கோரினார்.


தம் மீது பல பெண்களால் கூறப்பட்ட பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகளை கேவனோவ் மறுத்து வந்தார்.


அமெரிக்க செனட் சபையில் 50 க்கு 48 என்ற கணக்கில் அளிக்கப்பட்ட வாக்குகளின் ஊடாக, அந்த நாட்டின் நீதியரசர் பதவிக்கான கெவனோவின் நியமனம் உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.