நிதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த!

நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சராக பொறுப்பேற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சரவை நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பதவியேற்றது. அதன்படி, நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றுக் கொண்டார்.


இந்நிலையில் இன்று உத்தியோகப்பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக வெள்ளிக்கிழமை நியமித்தார்.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதிவரை ஒத்திவைத்தார். சபாநாயகருடன் கலந்தாலோசிக்காது இவ்வாறு நாடாளுமன்றம் திடீரென ஒத்திவைக்கப்பட்டமை பலர் மத்தியிலும் விமர்சனங்களை தோற்றுவித்தமை குறிப்பிடத்தக்கது.