காஷ்மீர்வாசிகள் மீது ரசாயன தாக்குதலா?.: பாக்.குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு


காஷ்மீர்வாசிகள் மீது ரசாயன தாக்குதல் நடத்தியதாக கூறிய பாகிஸ்தான் குற்றச்சாட்டினை இந்தியா மறுத்துள்ளது.

பாக். வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகம்மது ஃபைசல், நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், காஷ்மீர்வாசிகள் மீது இந்திய பாதுகாப்புபடையினர் ரசாயன ஆயுதங்களைப் பிரயோகித்து வருகின்றனர் என்றார்.

இதனை திட்டவட்டமாக இந்தியா மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார், கூறியது, உலகில் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் எந்த நாடும் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தினால் அதனை இந்தியா கண்டித்து வந்துள்ளது.

அப்படியிருக்கையில் இந்தியா மீது. பாகிஸ்தான் ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார்.