உலகின் மிகப்பெரிய ஆளில்லா விமானம் சீனாவில் சோதனை
போக்குவரத்துக்கான உலகின் மிகப்பெரிய ஆளில்லா விமானத்தை சீனா வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்துள்ளது.

எப்.எச் 98 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானத்தை சீனாவின் ஏரோஸ்பேஸ் மின்னணு தொழில்நுட்பக் கழகம் தயாரித்துள்ளது. 1.5 தொன் எடை கொண்ட பொருட்களை இந்த விமானம் சுமந்து செல்லும் திறன் பெற்றது.