Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவை இன்று ஆரம்பம்


உலகின் மிக நீண்ட நேர விமான போக்குவரத்தை இன்றைய தினம் ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.


சிங்கப்பூர் மற்றும் நியூயோர்க் நகரங்களுக்கு இடையில் இந்த நீண்ட நேர விமான போக்குவரத்து இன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது.


அதிக செலவீனம் காரணமாக கைவிடப்பட்டிருந்த இந்த விமான சேவையை, ஐந்து வருடங்களின் பின்னர் சிங்கப்பூர் விமான சேவை நிறுவனம் மீண்டும் இன்று ஆரம்பிக்கவுள்ளது.


15 ஆயிரத்திற்கும் அதிக கிலோமீற்றர் தூரம், சுமார் 18 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் இந்த விமானம் பயணிக்கின்றது.


சிங்கப்பூரின் ஷங்கி விமான நிலையத்திலிருந்து நியூயோர்க்கின் நியூவோர்க் விமான நிலையத்திற்கு இந்த விமானம் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.


சிங்கப்பூர் நேரத்தில் இரவு 11.35 க்கு இந்த விமானம் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.


இந்த விமான சேவைக்காக A350-900 ULR என்ற புதிய ரக விமானமொன்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.


இரண்டு எஞ்ஜின்களுடனான இந்த விமானத்தில் 67 வர்த்தக பிரிவிற்காக ஆசனங்கள் அடங்கலாக மொத்தமாக 161 ஆசனங்களை கொண்டமைந்துள்ளது.