தல அஜித்திற்கு கிடைத்த அமோக பாராட்டு!!


விஸ்வாசம் படவேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்ற நிலையில் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான டப்பிங் வேலைகளில் அஜித் இறங்கியுள்ளார். விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகுவது உறுதியாகிவிட்டது.


இந்நிலையில் அஜித்தின் ஆலோசனையுடன் சென்னை பல்கலைகழக மாணவர்கள் ஆளில்லா விமானம் ஒன்றை தயாரித்தனர். இந்த ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் பரிசு பெற்றள்ளது.


இதற்கு உதவியாக இருந்த நடிகர் அஜித்குமாருக்கு அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் சூரப்பா பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதனால் அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.