இன்று அதிகாலை அடுத்தடுத்து பல நாடுகளில் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன


பப்புவா நியூகினியாவில் 7 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது,

அந்த நாட்டு நேரப்படி இன்று அதிகாலை இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,


எவ்வாறாயினும் இதன் போது ஏற்பட்ட பாதிப்புக்கள் இதுவரை கண்டறியப்படவில்லை,


இந்த நில நடுக்கத்தையடுத்து மேலும் 6 மற்றும் 5 ரிக்டர் அளவுகளை அண்மித்த நில அதிர்வுகள் பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன


இதற்கு முன்னர் பப்புவா நியூகினியில் கடந்த பெப்ரவரி மாதம் பதிவான 7.5 ரிக்டர் அளவான நில அதிர்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது,


இதேவேளை இந்தோனிஷியாவின் பாலி தீவுகளில் 6 ரிக்டர் அளவிலான நில அதிர்வொன்று இன்று பதிவாகியுள்ளது,


இதன் போது மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சில கட்டடங்கள் ஜாவாவில் இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,


இதேவேளை ரஷ்யாவிலும் 6 தசம் 3 ரிக்டர் அளவிலான அதிர்வொன்று இன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவி சரிதவியல் ஆய்வு மையம் கூறியுள்ளது,