உயிர் பலியெடுக்கும் ஸ்கேன் இயந்திரம்.. அவதானம்!


மருத்துவர்களுக்கு நோயைக் கணிக்க எக்ஸ்ரே சி.டி. ஸ்கேனுக்கு அடுத்தபடியாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன்தான் பெரிதும் உதவுகிறது. தற்போதுள்ள ஸ்கேன் பரிசோதனைகளில் மிகச் சிறந்ததும் இதுதான். பல நோய்களை மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் கணிக்கின்றது.


எக்ஸ்ரே சி.டி.ஸ்கேன் கருவிகள் போல் இது எக்ஸ் கதிர்களைப் பயன்படுத்தி உடல் உறுப்புகளைப் படம் பிடிப்பதில்லை. மாறாக உடலில் ஒரு காந்தப் புலத்தை உருவாக்கி ரேடியோ அதிர்வலைகள் மூலம் ஒரு கணினியின் உதவியுடன் உறுப்புகளைப் படம் பிடித்துக் காண்பிக்கும் பரிசோதனை தான் இதுவாகும்.


இப்பரிசோதனையின் போது உயிர்பலி கூட ஏற்படுமாம். அதாவது தங்கம் வெள்ளி அணிந்துகொண்டு இந்த பரிசோதனையை மேற்கொண்டால் உயிர் போகும் நிலை ஏற்பட்டு விடுமாம். அவதானமாக செயற்படுங்கள்.