புலி குட்டிகளை பிடித்த பெண் தொழிலாளர்கள்


பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்தியபிரிவு தோட்டத்தில் தேயிலை மலையிலிருந்து கொழுந்த பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களினால் இரண்டு சிறுத்தை புலி குட்டிகள் உயிருடன் மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மதியம் 01.30 மணியளவில் பிடிக்கபட்டுள்ளன.குறித்த சிறுத்தை குட்டிகள் பிறந்து ஒருவாரங்கள் கடந்துள்ளதாகவும் தனது குட்டியினை விட்டு அதனுடைய தாய் இறைதேடி சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு குறித்த 12ம் தேயிலை மலை பகுதியில் பாரிய சிறுத்தை புலி ஒன்று இருப்பதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் நல்லதன்னி வனவிலங்கு காரியாலய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதோடு,மீட்கப்பட்ட சிறுத்தை குட்டிகளை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.