சிறுவர்களிடம் பணம் அறவிட்டு சிறுவர்களைச் சந்தோஷப்படுத்துவதற்குப் பெயரா சிறுவர் தினம்.?


ஒக்டோபர் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினம் நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளில்
அனுஷ்டிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இத்தினத்தில் சிறுவர்களின் உரிமை, பாதுகாப்பு, நலன்கள் பற்றியெல்லாம்; பேரூரைகளும், நடைபவணிகளும,; நிகழ்ச்சிகளும,; விழிப்புணர்வுகளும் நாடுபூராகவும் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தேறும். இந்நிகழ்ச்சிகள், அதிகாரிகளின் கட்டளைகளுக்காகவும,; நிறுவன மற்றும் சுய விளம்பரங்களுக்காகவும் நடந்தேறலாம்.


சிறுவர் தின நிகழ்சிகளையும் ஏனைய நிகழ்வுகளையும் நடத்தக் கூடாததென்றோ அல்லது நடந்துவது பிழையென்றோ நடத்தாமல் இருப்பது தவறென்றோ தெரிவிப்பதது நோக்கமில்லை. ஆனால், இச்சிறுவர் தினத்தின் இலக்கு, நோக்கம், கருப்பொருள் என்பவை கருத்திற்கொள்ளப்படாதது சிறுவர்களான மாணவர்களைச் சந்தோஷப்படுத்துவற்காக அம்மாணவர்களிடம் பணம் அறவிட்டு பாடசாலைகளை அலங்கரித்து, அம்மாணவர்களுக்கு உணவுப்பட்டங்களை வழங்கி அவர்;களைச் சந்தோஷப்படுத்துவதுதான் சிறுவர் தினமா? என இந்நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள ஒரு சில பாடசாலைகளினது அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் சமூக நலன் விரும்பிகள் கேள்வி எழுப்புகின்றனர்.


இவ்வாண்டின் சிறுவர் தினத்திற்கான கருப்பொருள் 'தைரியமாக முன்னோக்கிச் செல்வதற்காக சிறுவர்களைப் பலப்படுத்துவோம்' என்பதாகும். இக்கருப்பொருளானது பாடசாலைகளை அலங்கரிக்கவோ அல்லது அதற்காக மாணவர்களிடம் பணம் அறவிடவோ வலிறுத்தவில்லை.


மாறாக, மாணவர்களிடையே காணப்படும் திறன்களை விருத்தி செய்து அவர்களின் ஆளுமையைக் கட்டியெழுப்பி எதற்கும் முன்னின்று செயற்படக் கூடிய எதிர்கால சமுதாயத்தை பாடசாலைகளிலிருந்து உருவாக்குவதே இலக்காகவுள்ள நிலையில், சிறுவர் தினத்தின் இலக்கையும், நோக்கத்தையும், கருப்பொருளையும் மறந்துவிட்டு மாணவர்களிடம் பணம் அறவிட்டு அவர்கள் அணிவதற்கு ரீ-சேட்களை வழங்குவதும், பாடசாலைகளை அலங்கரிப்பதுவும்தான் சிறுவர் தினமா என்ற பெற்றோர்களினதும், சமூக நலன் விரும்பிகளினதும்; வினாவிற்கு விடையளிக்கப்படுமா?

- அஹ்சான் அஹ்மத் -