கட்டுநாயக்கா வந்த விமானம், திருப்பி அனுப்பி வைப்பு


கட்டுநாயக்க பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.


UL 405 என்ற விமானமே மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாங்கொக்கில் இருந்து வந்த விமானமே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.


குறித்த விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாலை 5.10 மணிக்கு தரையிற்றக்க திட்டமிட்டிருந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக மாலை 5.50 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.


135 பயணிகள் மற்றும் 9 ஊழியர்களுடன் பயணிக்கும் குறித்த விமானம் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.


பின்னர் கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி புறப்பட்ட விமானம் சீரற்ற காலநிலை காரணமாக மீண்டும் மத்தள விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டுள்ளது.