Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

மாணவனை மூர்க்கத்தனமாக தும்புத் தடியால் தாக்கிய ஆசிரியை… ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

மொரட்டுவ – தெலவல பகுதியில் ஆசிரியையொருவர் மாணவனை தும்புத்தடியால் தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.இந்த நிலையில் தாக்குதலுக்கு இலக்காகிய 12 வயதான மாணவன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த 3ஆம் திகதி குறித்த மாணவனை ஆசிரியை தும்புத்தடியினால் கடுமையாக தாக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.மாணவனின் தலை மற்றும் முதுகு பகுதிகளில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.பிற்பகல் 1.00 மணியளவில் ஆசிரியை மாணவனை தாக்கியுள்ள நிலையில் பாடசாலை முடிவடைந்து வீடு சென்ற மாணவன் வாந்தி எடுத்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து பெற்றோர் மாணவனை களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.இதனையடுத்து மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் அவரது தாய் முறைப்பாடு செய்துள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.