துருக்கி தூதரகத்தினால் பேராதனை பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு.


துருக்கியின் ஒத்துழைப்புக்கும் கூட்டிணைப்புக்குமான முகவர் நிலையத்தினால் (TIKA) பேராதனை
பல்கலைக்கழக விவசாய பீடத்துக்கு முப்பரிமாண அச்சு இயந்திரம் (3D Printer) ஒன்று வழங்கப்பட்டது.

இலங்கைக்கான துருக்கி தூதரகத்தில் நேற்று (02) இடம்பெற்ற நிகழ்வின் போதே இந்த முப்பரிமாண அச்சு இயந்திரம் வழங்கப்பட்டது.

இலங்கைக்கான துருக்கி தூதுவர் துண்கா ஒஸ்ஸுஹதார் பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பீடாதிபதி காமினி புஷ்பகுமாரவிடம் குறித்த முப்பரிமாண அச்சு இயந்திரத்தை கையளித்தார். இதன்போது இருவருக்கிடையிலும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கைக்கு பல்வேறு துறைகளிலும் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாகவும் வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் விளையாட்டு உள்ளிட அனைத்து துறைகளிலும் துருக்கி - இலங்கை இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் இதன்போது கருத்துத் தெரிவித்த துருக்கி தூதுவர் துண்கா ஒஸ்ஸுஹதார் குறிப்பிட்டார்.

பேராதனை பல்கலைக்கழகத்துக்கு கிடைத்த முதலாவது முப்பரிமாண அச்சு இயந்திரமாக இது கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (நுஸ்கி முக்தார்)
--
Nusky Mukthar (BSW)