இலங்கையில் உயிரைப் பறிக்கும் பயங்கர மரணக் குழி? யாரும் அருகில்கூட செல்லவேண்டாம்

…….
இலங்கையிலுள்ள நீர்வீழ்ச்சிக் குழி ஒன்றில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் அதில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலாங்கொட, பெலிஹூல் ஓய, பஹன்துடா கால்வாயிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

குறித்த னீர்வீழ்சியின் வெளிப் பகுதியில் நீராடியவாறு செல்பி புகைப்படம் எடுக்க முற்பட்ட இளைஞர் குழிக்குள் விழுந்துள்ளார். இதன்போது அவரைக் காப்பாற்றுவதற்கு முற்பட்ட மற்றொரு இளைஞரும் நீரில் மூழ்கினார்.

எவ்வாறாயினும் செல்வி எடுக்க முற்பட்ட இளைஞர் உயிரிழந்ததுடன் அவரைக் காப்பாற்ற குழியில் விழுந்த இளைஞர் நீரில் மூழ்கியமை காரணமாக வைத்தியசாலையில் செர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர்கள் தமது நண்பர்களுடன் நீராடச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த குழியில் இதற்கு முன்னரும் பல தடவைகள் சாவுகள் இடம்பெற்றுள்லதுடன் மிகவும் ஆபத்தான குழி என்பதால் அனைவரும் மிக கவனமாக இருக்கவேண்டும் எனவும் இந்த குழிக்கு அருகாமையில் செல்வதையே தவிர்க்கவேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.